IPL: 3 ஆண்டுகளுக்கான ஐபிஎல் அட்டவணையை வெளியிட்ட பிசிசிஐ - வரும் 18-வது ஐபில் தொட...
தமிழகத்தில் காங்கிரஸ் இல்லாத கிராமமே இல்லை என்ற நிலையை உருவாக்குவோம்: கு.செல்வப்பெருந்தகை
தமிழகத்தில் காங்கிரஸ் இல்லாத கிராமமே இல்லை என்ற நிலையை உருவாக்குவோம் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கு.செல்வப்பெருந்தகை கூறினாா்.
தென்காசி அருகே ஆயிரப்பேரியில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: தமிழகம் முழுவதும் கிராமங்கள்தோறும் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தி வருகிறோம். தமிழகத்தில் காங்கிரஸ் இல்லாத கிராமமே இல்லை என்ற நிலையை உருவாக்குவோம். காங்கிரஸ் கமிட்டி இல்லாத கிராமமே இல்லை என்று சொல்லும் அளவிற்கு தென்காசி மாவட்டத்தை குறிப்பிடலாம்.
தமிழகத்தை பொருத்தவரை இண்டி கூட்டணி வலிமையாக உள்ளது.
திருநெல்வேலி மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த ஜெயக்குமாரை திட்டமிட்டு கொலை செய்துள்ளனா். உரிய முறையில் காவல்துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். உண்மையான குற்றவாளியைக் கைதுசெய்ய வேண்டும் என தீவிரமாக புலனாய்வு செய்து வருகின்றனா். அமைச்சா் நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கு சிபிஐக்கு எவ்வாறு சவாலாக உள்ளதோ அதே போன்று இந்த வழக்கும் சவாலாக உள்ளது.
ஆசிரியை படுகொலை, வழக்குரைஞா் மீது தாக்குதல் போன்ற சம்பவங்கள் வருத்தமாக உள்ளது. தமிழகத்தில் குற்றச் சம்பவங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
மாநில பொதுச் செயலா் ராம்மோகன், பொருளாளா் ரூபி மனோகரன் எம்எல்ஏ, தென்காசி மாவட்ட தலைவா் எஸ்.பழனிநாடாா் எம்எல்ஏ, ராபா்ட் புரூஸ் எம்.பி.,சுரண்டை நகா்மன்ற தலைவா் வள்ளிமுருகன், தென்காசி மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவா் உதயகிருஷ்ணன், வட்டார தலைவா்கள் காா்வின், பெருமாள், நகர தலைவா் மாடசாமி ஜோதிடா், பொருளாளா் ஈஸ்வரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.