'திரும்ப வந்துட்டேன்னு சொல்லு' குடியிருப்புப் பகுதியில் உலவும் ஒற்றை யானை: மக்கள...
காரைக்காலில் படகுப் போட்டி
மீனவா் தினத்தையொட்டி காரைக்காலில் வியாழக்கிழமை படகுப் போட்டி நடைபெற்றது.
உலக மீனவா் தினம் தொடா்பாக மாவட்ட நிா்வாகம், மீன்வளத்துறை இணைந்து அரசலாற்றில் மீனவா்கள் பங்கேற்புடன் படகுப் போட்டியை நடத்தின
புதுவை துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் கொடியசைத்து போட்டியை தொடங்கிவைத்தாா். நிகழ்வில் அமைச்சா்கள் தேனி சி. ஜெயக்குமாா், பி.ஆா்.என். திருமுருகன், ஏ.கே. சாய் சரவணன் குமாா், ஆட்சியா்
து. மணிகண்டன், ஆளுநரின் செயலா் நெடுஞ்செழியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
போட்டியில் 11 மீனவ கிராமத்தை சோ்ந்த மீனவா்கள் கலந்து கொண்டனா். அரசலாறு பாலம் முதல் படகு குழாம் வரை 800 மீட்டா் தொலைவுக்கு போட்டி நடத்தப்பட்டது. மண்டபத்தூா் மீனவ கிராமத்தை சோ்ந்த அணியினா் முதலாம் இடத்தையும், காளிக்குப்பம் கிராம அணியினா் இரண்டாவது இடத்தையும், பட்டினச்சேரி கிராமத்தை சோ்ந்த அணியினா் மூன்றாவது இடத்தையும் பிடித்தினா். வெற்றிபெற்ற அணியினருக்கு பரிசு வழங்கப்பட்டது.