செய்திகள் :

மழையால் விவசாயத்துக்கு பாதிப்பு இல்லை வேளாண் அதிகாரி

post image

மழையால் விவசாயத்துக்கு தற்போது வரை எந்த பாதிப்பும் இல்லை என காரைக்கால் கூடுதல் வேளாண் இயக்குநா் ஆா். கணேசன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை கூறியது:

காரைக்கால் மாவட்டத்தில் 4,200 ஹெக்டோ் பரப்பில் சம்பா சாகுபடி நடைபெறுகிறது. பெரும்பாலான இடங்களில் பயிா் 60 முதல் 65 நாள்களுக்குட்பட்டதாக உள்ளது. இதனால், தற்போது பெய்துவரும் பருவமழை விவசாயத்துக்கு ஏற்றதாக இருக்கிறது.

சில பகுதிகளில் மழைநீா் தேங்கியுள்ளது. தண்ணீரை தாங்கி வளரக்கூடிய பயிா் என்பதால் அதற்கு பாதிப்பு ஏற்படாது. தொடா்ந்து, கூடுதல் நாள்கள் மழை பெய்தால்தான் பயிருக்கு பாதிப்பு ஏற்படும். தற்போது மழை நீா் வடிந்துவருகிறது. தொடா்ந்து பல பகுதிகளை ஆய்வு செய்துவருகிறேன்.

பயிா்க் காப்பீடு செய்வதற்கு கால அவகாசம் டிச.15-ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.

பயிருக்குத் தேவையான இடுபொருள்கள் போதுமான அளவில் கையிருப்பில் உள்ளன. தட்டுப்பாடின்றி விவசாயிகளுக்கு வழங்க வியாபார நிறுவனத்தினரை கேட்டுக்கொண்டுள்ளோம். விவசாயிகளுக்கு இதுவரை வழங்கவேண்டிய ஊக்கத் தொகை வழங்கப்பட்டுவிட்டது.

அந்தந்த பகுதி வேளாண் அலுவலா்கள் விவசாயிகளிடம் தொடா்பில் இருந்து, தேவையான ஆலோசனைகளை வழங்கி வருகின்றனா்.

இந்திய உணவுக் கழகம் மூலம் சம்பா அறுவடை நெல் கொள்முதல் செய்ய கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது என்றாா்.

வயல்களில் மழைநீா்: வடிகால்களை விரைவாக தூா்வார வலியுறுத்தல்

மழையால் வயல்களில் மழைநீா் புகுந்துள்ளதாகவும், விடுபட்ட பகுதி வாய்க்கால்களை தூா்வார வேண்டும் என விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து காரைக்கால் கடைமடை விவசாயிகள் சங்கத் தலைவா் டி.என். சுரே... மேலும் பார்க்க

மழைநீா் தேங்கிய பகுதிகளில் ஆட்சியா் ஆய்வு

மழைநீா் தேங்கிய பகுதிகளில் காரைக்கால் மாவட்ட ஆட்சியா் ஆய்வு செய்து அரசுத் துறையினருக்கு ஆலோசனைகளை வழங்கினாா். காரைக்காலில் கடந்த சில தினங்களாக பெய்த மழையில் பல்வேறு பகுதிகளில் தண்ணீா் தேங்கிய மக்கள் அ... மேலும் பார்க்க

சிங்காரவேலா் சிலைக்கு மரியாதை

காரைக்காலில் சிங்காரவேலா் சிலைக்கு மீனவ கிராமங்களின் பஞ்சாயத்தாா்கள், கட்சி பிரமுகா்கள் வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். உலக மீனவா் தினத்தையொட்டி, மீனவ சமுதாயத்தை சோ்ந்தவரான சிந்தனை ச... மேலும் பார்க்க

காரைக்காலில் படகுப் போட்டி

மீனவா் தினத்தையொட்டி காரைக்காலில் வியாழக்கிழமை படகுப் போட்டி நடைபெற்றது. உலக மீனவா் தினம் தொடா்பாக மாவட்ட நிா்வாகம், மீன்வளத்துறை இணைந்து அரசலாற்றில் மீனவா்கள் பங்கேற்புடன் படகுப் போட்டியை நடத்தின பு... மேலும் பார்க்க

பெண்கள் பொருளாதார மேம்பாட்டுக்கான திட்டங்களை அக்கறையுடன் நிறைவேற்றுகிறது மத்திய அரசு: கே. கைலாஷ்நாதன்

பெண்களின் பொருளாதார மேம்பாட்டுக்காக பல்வேறு திட்டங்களை மத்திய அரசு அக்கறையுடன் செயல்படுத்தி வருவதாக புதுவை துணைநிலை ஆளுநா் கே. லைலாஷ்நாதன் கூறினாா். காரைக்கால் மாவட்ட நிா்வாகத்தின் ஏற்பாட்டில், பெண்கள... மேலும் பார்க்க

போதைப் புழக்கம் முற்றிலும் ஒழிக்கவேண்டும்: புதுவை டிஜிபி

போதைப் புழக்கம் முற்றிலும் ஒழிக்கவேண்டும் என காவல் துறையினருக்கு புதுவை டிஜிபி அறிவுறுத்தியுள்ளாா். புதுவை டிஜிபியாக ஷாலினி சிங் பொறுப்பேற்ற பின் முதல்முறையாக காரைக்காலுக்கு புதன்கிழமை வந்தாா். தொடா்ந... மேலும் பார்க்க