செய்திகள் :

நவ.26-ல் எங்கெல்லாம் மிக கனமழைக்கு வாய்ப்பு!

post image

தமிழகத்தில் நவம்பர் 26-ல் மிக கனமழைக்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட தகவலில்,

தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று (22-11-2024) ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, நாளை 23-ஆம் தேதியில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அதற்கடுத்த இரு தினங்களில் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.

தெற்கு அந்தமான் கடல் பகுதிகளிலிருந்து மன்னார் வளைகுடா வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

22-11-2024 முதல் 24-11-2024 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

25-11-2024: கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

26-11-2024: கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும்,

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

27-11-2024: விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

28-11-2024: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சென்னை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையை பொருத்தவரை

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் அதிகாலை வேளையில் லேசான பனி மூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31-32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

தமிழக கடலோரப்பகுதிகள்:

22-11-2024: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

23-11-2024 மற்றும் 24-11-2024: எச்சரிக்கை ஏதுமில்லை.

25-11-2024 மற்றும் 26-11-2024: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

2025ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாள்கள்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில், வரும் 2025ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாள்கள் பட்டியலை தமிழக அரசு அறிவித்துள்ளது.ஒவ்வொரு ஆண்டும் முக்கிய பண்டிகைகள், நாள்களை பொது விடுமுறை நாள்களாக அறிவித்து தமிழக அரசு பட்டியல் ... மேலும் பார்க்க

தேனி: சபரிமலை சென்று திரும்பிய சிறுவன் பலி!

சபரிமலைக்கு சென்று திரும்பிய சிறுவன் கார் கவிழ்ந்து விபத்தில் பலியானார்.சேலத்தைச் சேர்ந்த 8 வயது சிறுவனான சித்தார்த் உள்பட 5 பேர் கொண்ட குடும்பத்தினர் சபரிமலைக்கு சென்றுவிட்டு, தேனி மாவட்டம் வழியாக கா... மேலும் பார்க்க

'திரும்ப வந்துட்டேன்னு சொல்லு' குடியிருப்புப் பகுதியில் உலவும் ஒற்றை யானை: மக்கள் அச்சம்

கோவை: மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சிறுமுகை வனச்சரக எல்லைக்குட்பட்ட வச்சினம்பாளையம் பகுதியில் ஒற்றை காட்டு யானை குடியிருப்புப் பகுதியில் உலவுவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதுகுறித்த விடியோ சமூக வலைதள... மேலும் பார்க்க

டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிா்ப்பு: அரிட்டாப்பட்டியில் திரண்ட கிராம மக்கள்

மதுரைமாவட்டம், மேலூா் வட்டம், அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து கிராம மக்கள் வியாழக்கிழமை மந்தையில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம், மேலூா் வட்டத்... மேலும் பார்க்க

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானைகள் தாக்கியதில் ஓராண்டில் 13 போ் உயிரிழப்பு

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானைகள் தாக்கியதில் ஓராண்டில் மட்டும் 13 போ் உயிரிழந்துள்ளதாக வனத் துறையினா் தெரிவித்துள்ளனா். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், ஆசன... மேலும் பார்க்க

கொலையான ஆசிரியை குடும்பத்துக்கு அரசின் ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்கல்

பட்டுக்கோட்டை அருகே பள்ளியில் புதன்கிழமை குத்திக் கொல்லப்பட்ட ஆசிரியை குடும்பத்திற்கு தமிழக அரசு அறிவித்த ரூ. 5 லட்சம் இழப்பீட்டுக்கான காசோலையை உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன் வியாழக்கிழமை வழ... மேலும் பார்க்க