இந்தியாவில் ஒரே ரயில்; 75 ஆண்டுகளாக இலவச பயணம்; எங்கே... ஏன் தெரியுமா?!
லாவோஸில் விஷச் சாராயத்துக்கு 6 சுற்றுலா பயணிகள் பலி!
லாவோஸில் விஷச் சாராயம் அருந்தி பலியான சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளது.
தெற்காசிய நாடுகளில் ஒன்றான லாவோஸ் நாட்டிற்கு சுற்றுலா சென்ற பயணிகள், வியங் நகரில் உள்ள மதுபான விடுதியில் அண்மையில் மது அருந்தியுள்ளனர். இதில் 30க்கும் மேற்பட்டோருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
விசாரணையில் அவர்கள் அருத்திய மதுவில் விஷத்தன்மையுடைய மெத்தனால் கலந்து இருந்தது தெரிய வந்தது.
மீண்டும் காளையின் ஆதிக்கத்தில் சென்செக்ஸ், நிஃப்டி!
உடனே அவர்கள் சிகிச்சைக்காக மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் அவர்களில் ஒருசிலர் மேல் சிகிச்சைக்காக அண்டை நாடான தாய்லாந்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும் இதுதொடர்பாக மதுபான விடுதி உரிமையாளரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இந்த சம்பவத்தில் இதுவரை இரண்டு ஆஸ்திரேலிய இளைஞர்கள் உட்பட 6 பேர் பலியாகியுள்ளனர். இந்நிகழ்வையடுத்து லாவோஸ் செல்லும் தங்கள் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளுக்கு ஆஸ்திரேலிய அரசு புதிய அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.