செய்திகள் :

10,12 ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு!

post image

பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளுக்கான அரையாண்டுத் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 10ஆம் தேதியும் 12ஆம் வகுப்பு மாணவர்களுககு டிசம்பர் 9ஆம் தேதியும் அரையாண்டு தேர்வு தொடங்குகிறது. டிசம்பவர் 23ஆம் தேதி தேர்வுகள் முடிவடைந்து அரையாண்டு விடுமுறை தொடங்குகிறது.

தொடர்ந்து டிசம்பர் 24ஆம் தேதி முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை அரையாண்டு தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அரையாண்டு தேர்வு விடுமுறை 9 நாட்களுக்கு பின் ஜனவரி 2ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு, 11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்புகளின் பொதுத் தேர்வுகளுக்கான அட்டவணை ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அரையாண்டுத் தேர்வு அட்டவணையும் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

நிதி உரிமைக்காக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

நிதி உரிமைக்காக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப வேண்டும் என திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். சென்னை - அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற திமுக நாடாளுமன்ற... மேலும் பார்க்க

தென்காசியில் பள்ளிகளுக்கு நாளை(நவ.23) விடுமுறை!

தென்காசி மாவட்டத்தில் நாளை(நவ.23) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்காளர்கள் முகாம் நடைபெறவுள்ளதையொட்டி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கனமழை காரணமாக நவ.20இல் விடப்பட்ட விடுமுறையை ஈட... மேலும் பார்க்க

2025ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாள்கள்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில், வரும் 2025ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாள்கள் பட்டியலை தமிழக அரசு அறிவித்துள்ளது.ஒவ்வொரு ஆண்டும் முக்கிய பண்டிகைகள், நாள்களை பொது விடுமுறை நாள்களாக அறிவித்து தமிழக அரசு பட்டியல் ... மேலும் பார்க்க

தேனி: சபரிமலை சென்று திரும்பிய சிறுவன் பலி!

சபரிமலைக்கு சென்று திரும்பிய சிறுவன் கார் கவிழ்ந்து விபத்தில் பலியானார்.சேலத்தைச் சேர்ந்த 8 வயது சிறுவனான சித்தார்த் உள்பட 5 பேர் கொண்ட குடும்பத்தினர் சபரிமலைக்கு சென்றுவிட்டு, தேனி மாவட்டம் வழியாக கா... மேலும் பார்க்க

நவ.26-ல் எங்கெல்லாம் மிக கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் நவம்பர் 26-ல் மிக கனமழைக்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட தகவலில், தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று (2... மேலும் பார்க்க

'திரும்ப வந்துட்டேன்னு சொல்லு' குடியிருப்புப் பகுதியில் உலவும் ஒற்றை யானை: மக்கள் அச்சம்

கோவை: மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சிறுமுகை வனச்சரக எல்லைக்குட்பட்ட வச்சினம்பாளையம் பகுதியில் ஒற்றை காட்டு யானை குடியிருப்புப் பகுதியில் உலவுவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதுகுறித்த விடியோ சமூக வலைதள... மேலும் பார்க்க