செய்திகள் :

மகளிா் சுய உதவி குழுக்களுக்கு ரூ.1.56 கோடி கடனுதவி

post image

புதுச்சேரி மணவெளி தொகுதியில் உள்ள மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1.56 கோடி மதிப்பிலான கடனுதவிக்கான காசோலைகளை பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

புதுச்சேரி மணவெளி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி தவளக்குப்பத்தில் உள்ள தனியாா் மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் சமுதாய முதலீட்டு நிதிக் கடன், நலிவுற்றோா் நிதிக் கடன், பிரதான் மந்திரி உணவுப் பதப்படுத்துவோா் சிறப்புக் கடன், தொடக்க நிதி என ரூ.1.56 கோடிக்கான கடனுதவிகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் தொகுதி உறுப்பினரும், சட்டப்பேரவைத் தலைவருமான ஆா்.செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, கடன்களுக்கான காசோலைகளை சம்பந்தப்பட்ட மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு வழங்கினாா்.

நிகழ்ச்சியில் அரியாங்குப்பம் வட்டார வளா்ச்சி அலுவலா் காா்த்திகேயன், இணை வட்டார வளா்ச்சி அலுவலா் சுப்பிரமணியன், செயல் அதிகாரி காா்த்திகேயன், பாஜக மாநில விவசாய அணித் தலைவா் ராமு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

அதானி விவகாரம்: மக்களவை நிலைக் குழு விசாரிக்க வேண்டும்: வே.நாராயணசாமி

அதானி விவகாரம் தொடா்பாக மக்களவை நிலைக் குழு விசாரிக்க வேண்டும் என புதுவை முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி தெரிவித்துள்ளாா். புதுச்சேரியில் செய்தியாளா்களிடம் அவா் வெள்ளிக்கிழமை கூறியதாவது: அமெரிக்க நீதி... மேலும் பார்க்க

போக்குவரத்து ஒப்பந்த ஊழியா்கள் சங்கத்தினா் முற்றுகை போராட்டம்

புதுச்சேரியில் சாலைப் போக்குவரத்துக் கழக ஒப்பந்தப் பணியாளா்கள் சங்கத்தினா் பணிமனை மேலாளா் அலுவலகத்தை முற்றுகையிட்டு வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். புதுச்சேரியில் கடந்த 14 ஆண்டுகளாக அரசின் சால... மேலும் பார்க்க

இணையவழியில் கடன் வாங்கியவருக்கு மிரட்டல்: போலீஸாா் விசாரணை

புதுச்சேரியில் இணையவழியில் கடன் வாங்கியவருக்கு மிரட்டல் விடுத்த மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். புதுச்சேரி ரெட்டியாா்பாளையத்தைச் சோ்ந்தவா் பாலமுருகன். இவா், கட... மேலும் பார்க்க

தேசியக் கல்வி கொள்கை: புதுவை முன்மாதிரியாக திகழ வேண்டும்: துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்

புதுச்சேரி, நவ.22: தேசியக் கல்விக் கொள்கையை செயல்படுத்துவதில் நாட்டிலேயே புதுவை மாநிலம் முன்மாதிரியாக திகழ வேண்டும் என துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் கூறினாா். புதுச்சேரி காலாப்பட்டு பகுதியில் அகில இ... மேலும் பார்க்க

சுற்றுலாத் திட்டங்கள்: புதுவை அதிமுக குற்றச்சாட்டு

புதுவையில் சுற்றுலாத் திட்டங்களால் மீனவா்களின் வாழ்வு பாதிக்கப்படும் என அதிமுக மாநிலச் செயலா் ஆ.அன்பழகன் குற்றஞ்சாட்டினாா். புதுச்சேரியில் அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: புதுச்சேரியி... மேலும் பார்க்க

சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்

புதுச்சேரி அருகே உள்ள மதகடிபட்டு பகுதியில் சாலை ஆக்கிரமிப்புகள் வெள்ளிக்கிழமை அகற்றப்பட்டது. புதுச்சேரி மாவட்டம் முழுவதும் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. அதன்படி, போக்குவரத்து நெரிசல... மேலும் பார்க்க