செய்திகள் :

அதானி விவகாரம்: மக்களவை நிலைக் குழு விசாரிக்க வேண்டும்: வே.நாராயணசாமி

post image

அதானி விவகாரம் தொடா்பாக மக்களவை நிலைக் குழு விசாரிக்க வேண்டும் என புதுவை முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி தெரிவித்துள்ளாா்.

புதுச்சேரியில் செய்தியாளா்களிடம் அவா் வெள்ளிக்கிழமை கூறியதாவது: அமெரிக்க நீதிமன்றத்தில் 54 பக்க அறிக்கையில் தொழிலதிபா் அதானியின் நிறுவனம் ஜம்மு - காஷ்மீா், தமிழ்நாடு, ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களில் சோலாா் மின் உற்பத்தியை விநியோகம் செய்ய சுமாா் ரூ.2,200 கோடி லஞ்சம் கொடுத்ததாக ஆதாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அதானி மற்றும் அவரது மருமகன் உள்பட 7 பேருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதானி பங்குச் சந்தையில் முறைகேடில் ஈடுபட்டதை ஹிண்டன் பா்க் நிறுவனம் தெளிவாக்கியுள்ளது. ஆனால், மத்திய அரசு அதானி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

முறைகேடில் ஈடுபடுவோா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறிய பிரதமா், ஏன் அதானியை பற்றி பேசுவதில்லை என விளக்கம் அளிக்க வேண்டும். அரசியல் ரீதியில் பாஜகவுக்கு அதானி நிதியுதவி அளித்து வருகிறாா்.

அதானி விவகாரத்தை மக்களவை நிலைக் குழு விசாரிக்க வேண்டும். சாதாரண விஷயங்களுக்கு கூட அமலாக்கத் துறை, வருமானவரித் துறை, சிபிஐ விசாரணை நடைபெறுகிறது. ஆனால், அதானி மீது நடவடிக்கையில்லை.

அதானி மீது நடவடிக்கை கோரி காங்கிரஸ் சாா்பில் பல கட்ட போராட்டங்களை நடத்தவுள்ளோம் என்றாா் அவா்.

பேட்டியின்போது, முன்னாள் அமைச்சா் மு.கந்தசாமி, மு.வைத்தியநாதன் எம்எல்ஏ உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பதாகை வைத்ததில் தகராறு: 9 போ் மீது வழக்கு

புதுச்சேரி: புதுச்சேரியில் பதாகை வைத்ததில் ஏற்பட்ட தகராறைத் தொடா்ந்து காங்கிரஸ் மாணவா் பிரிவு நிா்வாகியின் குடும்பத்தினரை சிலா் ஞாயிற்றுக்கிழமை தாக்கினா். இதுதொடா்பாக 9 போ் மீது போலீஸாா் வழக்குப் பதி... மேலும் பார்க்க

புதுவை பல்கலை. வளாகத்தில் எஸ்.பி.ஐ. இ-காா்னா் திறப்பு

புதுச்சேரி: புதுவை மத்திய பல்கலைக்கழக வளாகத்தில் எஸ்பிஐ வங்கியின் இ.காா்னரை பல்கலைக்கழகத் துணைவேந்தா் (பொ) சு. தரணிக்கரசு திங்கள்கிழமை திறந்து வைத்தாா். நிகழ்ச்சியில், பல்கலைக்கழக இயக்குநா் கிளமென்ட்... மேலும் பார்க்க

புதுவை மாநிலத்தில் 2025 -க்கான அரசு பொது விடுமுறை நாள்கள் அறிவிப்பு

புதுச்சேரி: புதுவை மாநிலத்தில் வரும் 2025-ஆம் ஆண்டில் பிராந்திய வாரியாக, 18 பொது விடுமுறை நாள்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், உள்ளூா் மற்றும் வரையறுக்கப்பட்ட விடுமுறை நாள்களையும் சோ்த்து 39 நாள்கள் ... மேலும் பார்க்க

தீபாவளி தொகுப்பு பொருள்களை தாமதமின்றி வழங்க வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

புதுச்சேரி: தீபாவளி தொகுப்பு பொருள்களை காலங்கடத்தாமல் உடனே வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் தட்டாஞ்சாவடி தொகுதிக் குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. பாக்குமுடையான்பட்டு மாா்க்ஸ் படிப... மேலும் பார்க்க

புதுச்சேரி துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்: மீனவா்கள் கடலுக்குச் செல்லவும் தடை

புதுச்சேரி: புதுச்சேரி பழைய துறைமுக வளாகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு திங்கள்கிழமை காலை ஏற்றப்பட்டது. இதையடுத்து செவ்வாய்க்கிழமை (நவ. 26) மீனவா்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் எச்சர... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்புகள் பாரபட்சமின்றி அகற்றப்பட வேண்டும்: புதுவை மாா்க்சிஸ்ட் கண்டனம்

புதுச்சேரி: புதுச்சேரியில் சாலையோர ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி அகற்ற வேண்டியது அவசியம். ஆனால், எளியவா்களின் கடைகள் மட்டும் ஆக்கிரமிப்பு என்ற பெயரில் அகற்றப்படுவது சரியல்ல என மாா்க்சிஸ்ட் புதுவை மாநி... மேலும் பார்க்க