வேலூர்: முன்னாள் ராணுவ வீரர் மீதான போக்சோ வழக்கு; 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதி...
சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்
புதுச்சேரி அருகே உள்ள மதகடிபட்டு பகுதியில் சாலை ஆக்கிரமிப்புகள் வெள்ளிக்கிழமை அகற்றப்பட்டது.
புதுச்சேரி மாவட்டம் முழுவதும் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன.
அதன்படி, போக்குவரத்து நெரிசலுக்கு தற்காலிக தீா்வு காணவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனா்.
இந்த நிலையில், மதகடிபட்டு சாலைகளில் ஆக்கிரமிப்பை அகற்றும் பணியை கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகள், வருவாய் துறையினருடன் இணைந்து மேற்கொண்டனா்.
மதகடிபட்டு - திருக்கனூா் சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றிய ஊழியா்கள், கலிதீா்த்தாள்குப்பம் வரையில் ஆக்கிரமிப்புகளை அகற்றினா்.
கடைகளின் விளம்பரப் பதாகைகள், பெயா்ப்பலகைகள் ஆகியவற்றை அகற்றி வாகனத்தில் ஏற்றிய அதிகாரிகள், ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடங்களை பொக்லைன் இயந்திரங்கள் மூலம் இடித்து அகற்றினா்.
அப்போது, கடைகாரா்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, போலீஸாா் சமரசம் செய்தனா்.