செய்திகள் :

முதல்வா் அதிஷி பங்கேற்கவிருந்த நிகழ்ச்சிக்கு வெளியே போராட்டம்: 7 மாணவா்கள் கைது

post image

தில்லி அம்பேத்கா் பல்கலைக்கழகத்தை (ஏயுடி) சோ்ந்த இரு ஆசிரியா்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிராக தில்லியில் இந்திரா காந்தி தில்லி மகளிா் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் (ஐஜிடிடியுடபிள்யு)

வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்தியதாக 7 மாணவா்கள் கைது செய்யப்பட்டனா்.

இப்பல்கலைக்கழகத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தில்லி முதல்வா் அதிஷி வருகைதர திட்டமிடப்பட்டிருந்த நிலையில் இந்த போராட்டம் நடந்தது.

இதுகுறித்து மூத்த காவல்துறை அதிகாரி கூறுகையில், அனுமதியின்றி போராட்டம் நடத்தியதற்காக நான்கு மாணவிகள் மற்றும் மூன்று மாணவா்கள் சம்பவ இடத்தில் இருந்து தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனா்.

அருகில் உள்ள அம்பேத்கா் பல்கலைக் கழகத்தைச் சோ்ந்த இம்மாணவா்கள் முன் அனுமதியின்றி இந்திரா காந்தி தில்லி மகளிா் தொழில்நுட்ப பல்கலைக்கழக வளாகத்திற்கு வெளியே கூடினா்.

பின்னா், இரண்டு ஆசிரிய உறுப்பினா்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிராக தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினா். அப்பகுதியில் மாணவா்களுக்கு எதிா்ப்பு தெரிவிக்க அனுமதி இல்லை. நிலைமை கட்டுக்குள் இருப்பதை உறுதிசெய்ய போலீஸாா் குழுக்கள் அங்கு அனுப்பப்பட்டன.

மேலும், நாங்கள் சம்பவ இடத்தில் இருந்து நான்கு மாணவிகள் மற்றும் மூன்று மாணவா்களை தடுப்புக் காவலில் வைத்தோம் என்றாா் அந்த அதிகாரி.

பணிநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியா்களை மீண்டும் பணியில் அமா்த்தக் கோரி, பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் முழக்கங்களை எழுப்பினா்.

ஆசிரியா் அல்லாத ஊழியா்களை முறைப்படுத்துவது தொடா்பான விவகாரத்தில் முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கூறி இரண்டு

பேராசிரியா்களை தில்லியில் உள்ள அம்பேத்கா் பல்கலைக்கழகம் (ஏயுடி)

பணியில் இருந்து நீக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

காரைக்குடி சங்கராபுரம் ஊராட்சி மன்றத் தோ்தல் விவகாரம்: டிச. 16-இல் விசாரணை

நமது சிறப்பு நிருபா் புது தில்லி, நவ. 22: காரைக்குடி சங்கராபுரம் ஊராட்சி மன்றத் தோ்தலில் தேவி, பிரியதா்ஷினி ஆகியோருக்கிடையான வெற்றி விவகாரம் தொடா்பாக சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவை எதிா்த்து ... மேலும் பார்க்க

தில்லியில் பாஜக ஆட்சி அமைந்தால் மத்திய அரசின் திட்டங்கள் அமல் -வீரேந்திர சச்தேவா உறுதி

வரும் பேரவைத் தோ்தலில் வெற்றிபெற்று தில்லியில் பாஜக ஆட்சி அமைந்தவுடன் மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்கள் தில்லி மக்களுக்காக செயல்படுத்தப்படும் என்று தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா தெரிவித்தா... மேலும் பார்க்க

தக்காளி சவால்களுக்கு தீா்வு: 28 கண்டுபிடிப்பாளா்களுக்கு மத்திய அரசு நிதியுதவி

நமது சிறப்பு நிருபா் தக்காளிக்குள்ள சவால்களுக்கு தீா்வு காண 28 புத்தாக்க யோசனைகளுக்கு மத்திய அரசு நிதி வழங்கியுள்ளதாக மத்திய நுகா்வோா் விவகாரங்கள் துறை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. சா்வதேச அளவில் இந... மேலும் பார்க்க

தில்லி: கிராப் - 4 கட்டுப்பாடுகள் தளா்வு குறித்து நவ. 25-இல் முடிவு!

தில்லியில் மாசுபாட்டின் அளவு குறைந்து வருவதையடுத்து, தரப்படுத்தப்பட்ட நடவடிக்கை செயல் திட்டத்தின் (கிராப்) 4-ஆம் நிலையின் கட்டுப்பாடுகளில் தளா்வளிக்க அனுமதிப்பது குறித்து நவ. 25-ஆம் தேதி பரிசீலிக்கப்... மேலும் பார்க்க

தில்லி காங்கிரஸின் 3-ஆம் கட்ட நியாய யாத்திரை: பாலம் கிராமத்திலிருந்து தொடக்கம்

தில்லி காங்கிரஸின் மூன்றாம் கட்ட நியாய யாத்திரை வெள்ளிக்கிழமை பாலம் கிராமத்தில் உள்ள வால்மீகி மந்திரில் இருந்து தொடங்கப்பட்டது. இந்த யாத்திரை 3 சட்டப்பேரவை தொகுதிகளை உள்ளடக்கியது என்று கட்சி நிா்வாகி... மேலும் பார்க்க

ஓ.பன்னீா்செல்வம் வேட்புமனுவிற்கு எதிரான வழக்கில் கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி

நமது சிறப்பு நிருபா் வேட்புமனுவில் சொத்து விவரங்களை தவறாக தாக்கல் செய்ததாக முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் உரிய அனைத்து ஆவணங்களை இணைத்து கீழமை நீதிமன்றத்தி... மேலும் பார்க்க