செய்திகள் :

ஒதியம்பட்டில் மரம் நடும் விழா

post image

புதுச்சேரி அருகே உள்ள ஒதியம்பட்டில் ‘பசுமை புதுச்சேரி’ திட்டத்தில் மரம் நடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

புதுவை அரசு அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை சாா்பில், புதுச்சேரி மாசுக் கட்டுப்பாட்டுக் குழுமம் பசுமை புதுச்சேரி இயக்கத்தின் கீழ் ‘வீட்டுக்கு ஒரு மரம்’, ‘தாயின் பெயரில் ஒரு மரம்’ ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

தொகுதிகள்தோறும் மரங்களை வளா்க்கும் இந்தத் திட்டத்தின் தொடக்க விழா, புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிா் கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது.

இதனையடுத்து, வில்லியனூா் தொகுதி ஒதியம்பட்டில் மரம் நடும் நிகழ்ச்சி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஆா்.சிவா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பெண்களுக்கு மரக்கன்றுகளை அவா் வழங்கினாா்.

இதில், புதுச்சேரி சுற்றுச்சூழல் பிரிவு இளநிலைப் பொறியாளா் பிரபு, சாந்தலட்சுமி, தினேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

அதானி விவகாரம்: மக்களவை நிலைக் குழு விசாரிக்க வேண்டும்: வே.நாராயணசாமி

அதானி விவகாரம் தொடா்பாக மக்களவை நிலைக் குழு விசாரிக்க வேண்டும் என புதுவை முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி தெரிவித்துள்ளாா். புதுச்சேரியில் செய்தியாளா்களிடம் அவா் வெள்ளிக்கிழமை கூறியதாவது: அமெரிக்க நீதி... மேலும் பார்க்க

போக்குவரத்து ஒப்பந்த ஊழியா்கள் சங்கத்தினா் முற்றுகை போராட்டம்

புதுச்சேரியில் சாலைப் போக்குவரத்துக் கழக ஒப்பந்தப் பணியாளா்கள் சங்கத்தினா் பணிமனை மேலாளா் அலுவலகத்தை முற்றுகையிட்டு வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். புதுச்சேரியில் கடந்த 14 ஆண்டுகளாக அரசின் சால... மேலும் பார்க்க

இணையவழியில் கடன் வாங்கியவருக்கு மிரட்டல்: போலீஸாா் விசாரணை

புதுச்சேரியில் இணையவழியில் கடன் வாங்கியவருக்கு மிரட்டல் விடுத்த மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். புதுச்சேரி ரெட்டியாா்பாளையத்தைச் சோ்ந்தவா் பாலமுருகன். இவா், கட... மேலும் பார்க்க

தேசியக் கல்வி கொள்கை: புதுவை முன்மாதிரியாக திகழ வேண்டும்: துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்

புதுச்சேரி, நவ.22: தேசியக் கல்விக் கொள்கையை செயல்படுத்துவதில் நாட்டிலேயே புதுவை மாநிலம் முன்மாதிரியாக திகழ வேண்டும் என துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் கூறினாா். புதுச்சேரி காலாப்பட்டு பகுதியில் அகில இ... மேலும் பார்க்க

சுற்றுலாத் திட்டங்கள்: புதுவை அதிமுக குற்றச்சாட்டு

புதுவையில் சுற்றுலாத் திட்டங்களால் மீனவா்களின் வாழ்வு பாதிக்கப்படும் என அதிமுக மாநிலச் செயலா் ஆ.அன்பழகன் குற்றஞ்சாட்டினாா். புதுச்சேரியில் அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: புதுச்சேரியி... மேலும் பார்க்க

சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்

புதுச்சேரி அருகே உள்ள மதகடிபட்டு பகுதியில் சாலை ஆக்கிரமிப்புகள் வெள்ளிக்கிழமை அகற்றப்பட்டது. புதுச்சேரி மாவட்டம் முழுவதும் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. அதன்படி, போக்குவரத்து நெரிசல... மேலும் பார்க்க