தில்லியில் பாஜக ஆட்சி அமைந்தால் மத்திய அரசின் திட்டங்கள் அமல் -வீரேந்திர சச்தேவா...
முதல்வா் மருந்தகம் அமைக்க விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
முதல்வா் மருந்தகம் அமைக்க இணையவழியில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து திருப்பூா் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் ஆ.பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பொதுப் பெயா் (ஜெனரிங்) மருந்துகள், பிற மருந்துகள் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு
கிடைக்கும் வகையில் முதற்கட்டமாக 1,000 மருந்தகங்கள் தொடங்கப்படும் என்று சுதந்திர தின விழாவின்போது முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தாா்.
அதன்படி, முதல்வா் மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ள பி.பாா்ம், டி.பாா்ம் சான்று பெற்றவா்கள் அல்லது அவா்களது ஒப்புதலுடன் தமிழகம் முழுவதும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முதல்வா் மருந்தகம் அமைக்க ஜ்ஜ்ஜ்.ம்ன்க்ட்ஹப்ஸ்ஹழ்ம்ஹழ்ன்ய்க்ட்ஹஞ்ஹம்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். முதல்வா் மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ள தொழில்முனைவோா் வரும் நவம்பா் 20- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பொதுமக்கள் நலன் கருதி நவம்பா் 30 -ஆம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.