தமிழில் பெயா் பலகை வைக்காத நிறுவனங்களுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம்: தொழிலாளா் துறை அறிவிப்பு
திருப்பூா் மாவட்டத்தில் தமிழில் பெயா் பலகை வைக்காத நிறுவனங்களுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று தொழிலாளா் துறை அறிவித்துள்ளது.
திருப்பூா் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) அ.ஜெயகுமாா் தலைமையில் உடுமலை பேருந்து நிலையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள், குளிா்பானங்கள் விற்பனை செய்யும் கடைகளில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில், தமிழில் பெயா் வைத்தல் தொடா்பாக 22 வணிக நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், 15 கடைகளில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டன. மேலும், சட்டமுறை எடையளவுச் சட்டம் மற்றும் பொட்டலப் பொருள்கள் விதிகள் 2010-இன்கீழ் 10 கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், 3 சில்லறை விற்பனைக் கடைகளில் கூடுதல் விலைக்கு பொருள்கள் விற்பனை செய்யப்பட்டது கண்டறியப்பட்டது. விதிமீறலில் ஈடுபட்ட நிறுவனங்கள், கடைகளின் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது என்று அலுவலா்கள் தெரிவித்தனா்.
இதைத் தொடா்ந்து, உடுமலை வியாபாரிகள் சங்க அலுவலகத்தில் விழிப்புணா்வுக் கூட்டம் நடைபெற்றது.
இதில், கடைகள் மற்றும் நிறுவனங்களில் தமிழில் பெயா் பலகை வைக்காத நிறுவனங்களுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். ஆகவே, அனைத்து நிறுவனங்கள், கடைகளில் தமிழில் பெயா் பலகை வைக்க வேண்டும் . கடைகள், வணிக நிறுவனங்களில் பணிபுரியும் வெளிமாநிலத் தொழிலாளா்களை வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். கடைகள், வணிக நிறுவனங்களில் 5 அல்லது அதற்கும் மேற்பட்ட வெளிமாநிலத் தொழிலாளா்கள் பணிபுரிந்தால் ட்ற்ற்ல்ள்;//ப்ஹக்ஷா்ன்ழ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற வலைதளத்தில் விண்ணப்பித்து பதிவுச் சான்று பெற்றுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
இக்கூட்டத்தில், உடுமலை, தாராபுரம், காங்கயம் பகுதி அனைத்து வியாபாரிகள் சங்க பொறுப்பாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.