இலங்கைக்கு கடத்த முயன்ற 330 கிலோ கஞ்சா, 3 படகுகள் பறிமுதல்: கண்டெய்னா் லாரி ஓட்...
சரிவிலிருந்து மீண்ட அதானி பங்குகள்!
புதுதில்லி: அதானி குழுமத்தின் பங்குகள், முந்தைய நாளில் சரிவிலிருந்து இன்று மீண்டது.
அதே வேளையில், இந்திய பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் இன்று 2.54 சதவிகிதம் உயர்ந்து 79,117.11 புள்ளிகளில் நிலைபெற்றது.
அம்புஜா சிமெண்ட்ஸ் பங்குகள் 3.50 சதவிகிதமும், ஏசிசி 3.17 பங்குகள் சதவிகிதமும், குழுமத்தின் முதன்மை நிறுவனமான அதானி எண்டர்பிரைசஸ் பங்குகள் சதவிகிதமும், அதானி போர்ட்ஸ் பங்குகள் 2 சதவிகிதமும், அதானி டோட்டல் கேஸ் பங்குகள் 1.18 சதவிகிதமும், என்டிடிவி பங்குகள் 0.65 சதவிகிதமும் உயர்ந்தது.
இதற்கு மாறாக, அதானி கிரீன் எனர்ஜி பங்குகள் 8.20 சதவிகிதமும், அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் 6.92 சதவிகிதமும், அதானி பவர் 3.23 சதவிகிதமும், அதானி வில்மர் 0.73 சதவிகிதம் சரிந்தது.
இதையும் படிக்க: தென்காசியில் பள்ளிகளுக்கு நாளை(நவ.23) விடுமுறை!
சூரிய சக்தி ஒப்பந்தங்களுக்கு சாதகமான விதிமுறைகளுக்கு ஈடாக இந்திய அதிகாரிகளுக்கு சுமார் ரூ.2,200 கோடி லஞ்சம் கொடுத்தது தொடர்பாக கௌதம் அதானி மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களால் குற்றம் சாட்டப்பட்ட நிலையில், இன்றைய காலை நேர வர்த்தகத்தில், அதானி குழுமத்தின் பெரும்பாலான பங்குகள் உயர்ந்து.
அதானி குழும நிறுவன பங்குகள் நேற்றைய வர்த்தகத்தில் (வியாழக்கிழமை) கடுமையாக சரிந்தது குறிப்பிடத்தக்கது.
அதானி குழுமம் நேற்று சூரிய மின்சக்தி ஒப்பந்தங்களுக்கு சாதகமான விதிமுறைகளைப் பெறுவதற்கு லஞ்சம் கொடுத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள நிலையில், அமெரிக்க வழக்கறிஞர்களின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றது.
இதனிடையில் குழுமம் அனைத்து சட்டங்களுக்கும் இணங்குவதாகவும் தெரிவித்துள்ள வேளையில் அனைத்து சட்ட உதவிகளும் கோரப்படும் என்றும் நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.