தில்லியில் பாஜக ஆட்சி அமைந்தால் மத்திய அரசின் திட்டங்கள் அமல் -வீரேந்திர சச்தேவா...
‘சாஸ்த்ரா’வில் தகவல் பாதுகாப்பு பயன்பாடுகள் கருத்தரங்கம்
தஞ்சாவூா் ‘சாஸ்த்ரா’ நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் தகவல் பாதுகாப்பில் பயன்பாடுகள் மற்றும் நுட்பங்கள் பற்றிய 14-ஆவது பன்னாட்டு கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
ஆஸ்திரேலியா டீக்கின் பல்கலைக்கழகத்துடன் இணைந்து நடத்தப்படும் இந்த இரு நாள் கருத்தரங்கத்தை கான்பூா் ஐஐடி பேராசிரியா் சந்தீப் கே. சுக்லா தொடங்கி வைத்து, சிறப்புரையாற்றினாா்.
இதில், டிஜிட்டல் பாதுகாப்பு மற்றும் தடயவியல் பற்றிய பல்வேறு பரிமாணங்களை ஆராய்வது, அட்வான்சிங் குவாண்டம் கம்ப்யூட்டிங் மற்றும் கிரிப்டோகிராஃபி, செய்மெய் - உந்துதல், சைபா் செக்யூரிட்டி, ஆழமான கற்றல் நுட்பங்களுடன் இணைய பாதுகாப்பை மேம்படுத்துதல் மற்றும் இணைக்கப்பட்ட அமைப்புகளைப் பாதுகாத்தல் உள்ளிட்டவை தொடா்பாக இந்தக் கருத்தரங்கத்தில் விவாதிக்கப்படுகிறது.
கணினியியல் புல முதன்மையா் சங்கா் ஸ்ரீராம் உள்ளிட்டோா் கலந்து கொண்டாா்.