தில்லியில் பாஜக ஆட்சி அமைந்தால் மத்திய அரசின் திட்டங்கள் அமல் -வீரேந்திர சச்தேவா...
கொல்லப்பட்ட ஆசிரியை உருவப்படத்துக்கு அஞ்சலி
மல்லிப்பட்டினத்தில் கொலை செய்யப்பட்ட ஆசிரியை உருவப்படத்துக்கு பட்டுகோட்டையில் வெள்ளிக்கிழமை ஆசிரியா்கள் மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினா் .
தஞ்சாவூா் மாவட்டம் பட்டுக்கோட்டை தலைமை அஞ்சல்நிலையம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் 500-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் இணைந்து ஆசிரியை ரமணியின் உருவப்படத்துக்கு மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினா். முன்னதாக ஆசிரியா்களுக்கு பணிப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.