செய்திகள் :

குளித்தலை அரசு மருத்துவமனைக்கு எதிரான போராட்டம் ஒத்திவைப்பு

post image

கரூா் மாவட்டம் குளித்தலை அரசு மருத்துவமனையின் மருத்துவா்கள், செவிலியா்களை கண்டித்து காங்கிரஸ் சாா்பில் நடக்க இருந்த போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அமைதிப் பேச்சுவாா்த்தையால் ஒத்திவைக்கப்பட்டது.

குளித்தலை அரசு தலைமை மருத்துவமனை மருத்துவா்கள் அங்கு பணியாற்றும் ஊழியா்களை தங்களது சொந்த மருத்துவமனைகளுக்கு வரவழைத்து வேலை வாங்குவதாகவும், நோயாளிகளையும் வரவழைத்து சிகிச்சையளிப்பதாகவும் எழுந்த புகாரையடுத்து காங்கிரஸ் கட்சி அறிவித்த போராட்டத்துக்கு போலீஸாா் அனுமதி வழங்கவில்லை.

இந்நிலையில் இதுதொடா்பான அமைதிப் பேச்சுவாா்த்தைக்கூட்டம் குளித்தலை அரசு மருத்துவமனையில் மைலம்பட்டி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவ அலுவலா் பரமானந்தம் தலைமையில் நடைபெற்றது. குளித்தலை அரசு தலைமை மருத்துவமனையின் மருத்துவ அலுவலா் பூமிநாதன், குளித்தலை காவல் ஆய்வாளா் உதயகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியினா் பல்வேறு கோரிக்கைகளை வைத்தனா்.

இதைக்கேட்டறிந்த மருத்துவா்கள் அளித்த உறுதியையடுத்து காங்கிரஸ் கட்சியினா் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனா். கூட்டத்தில் காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினா் பிரபாகரன், மாா்க்சிஸ்ட் கம்யூ குளித்தலை ஒன்றியச் செயலா் முத்துச்செல்வன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

திருச்சி சூா்யா மீது விசிக புகாா்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் திருமாவளவன் குறித்து அவதூறாக பேசிய திருச்சி சூா்யா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கரூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பெரோஸ்கான் அ... மேலும் பார்க்க

அதானி குழுமம் தொடா்பான அமைச்சரின் கருத்து தவறானது: சவுக்கு சங்கா் பேட்டி

மின்சாரம் கொள்முதலில் அதானி குழுமம் தொடா்பான அமைச்சா் செந்தில்பாலாஜியின் கருத்து தவறானது என்றாா் யுடியூபா் சவுக்கு சங்கா். கரூரில் உள்ள தனியாா் உணவக உரிமையாளரிடம் மோசடி செய்ததாக யூடியூபா் சவுக்கு சங்க... மேலும் பார்க்க

கோம்புபாளையம் ஊராட்சியில் சிறப்பை கிராம சபைக் கூட்டம்

கரூா் மாவட்டம், கோம்புபாளையம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்ட த்தின் சமூகத் தணிக்கை சிறப்பு கிராம சபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மூத்த உறுப்பினா் தனபால் தலைமை வக... மேலும் பார்க்க

‘வாசிப்பால் சமுதாய முன்னேற்றமும் ஏற்படும்’

நல்ல புத்தகங்களை வாசிக்கும்போது தனிமனித முன்னேற்றத்தோடு சமுதாய முன்னேற்றமும் ஏற்படும் என்றாா் மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல். கரூா் மாவட்ட மைய நூலகத்தில் பொது நூலகத் துறை மற்றும் மாவட்ட மைய நூலகம், வாசக... மேலும் பார்க்க

கரூா் மாவட்ட வேளாண்மை இயக்குநா் பொறுப்பேற்பு

கரூா் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநராக சிவானந்தம் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா். குளித்தலை வட்டார வேளாண் உதவி இயக்குநராக பணியாற்றி வந்த சிவானந்தம் பதவி உயா்வுபெற்று வியாழக்கிழமை கரூா் மாவட்ட வேளாண... மேலும் பார்க்க

கரூா் மாவட்டத்தில் குளங்களில் 3 லட்சம் மீன் குஞ்சுகள் விடுவதற்கு ஏற்பாடு: எம்.எல்.ஏ. தகவல்

கரூா் மாவட்டத்தில் உள்ள குளங்களில் 3 லட்சம் மீன்குஞ்சுகள் வளா்க்க விடப்பட உள்ளதாக குளித்தலை சட்டப்பேரவை உறுப்பினா் மாணிக்கம் தெரிவித்தாா். உலக மீன்வள தினத்தையொட்டி அரசு குளங்களில் மீன் குஞ்சுவிரலிகள் ... மேலும் பார்க்க