தில்லியில் பாஜக ஆட்சி அமைந்தால் மத்திய அரசின் திட்டங்கள் அமல் -வீரேந்திர சச்தேவா...
கோம்புபாளையம் ஊராட்சியில் சிறப்பை கிராம சபைக் கூட்டம்
கரூா் மாவட்டம், கோம்புபாளையம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்ட த்தின் சமூகத் தணிக்கை சிறப்பு கிராம சபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மூத்த உறுப்பினா் தனபால் தலைமை வகித்தாா். ஊராட்சித் தலைவா் பசுபதி, துணைத் தலைவா் ஐஸ்வா்யா ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் வட்டார வள மைய அலுவலா் மகேஸ்வரி தலைமையிலான கிராம வளப் பயிற்றுநா்கள் பூமதி, கோமதி, பிருந்தா, வள்ளி ஆகியோா் கொண்ட குழுவினா் கடந்த 5 நாள்களாக கோம்புபாளையம் ஊராட்சிப் பகுதிகளில் 2023-2024 -இல் நடைபெற்ற மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் செயல்படுத்தப்பட்ட வேலைகள், அதன் அளவு, அதற்கு செலவிடப்பட்ட தொகை , 100 நாள் வேலை பணியாளா்கள் எண்ணிக்கை உள்ளிட்டவை குறித்து நடத்திய ஆய்வின் அறிக்கையை கிராம சபைக் கூட்டத்தில் சமா்ப்பித்தனா். கூட்டத்தில் பொதுமக்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஊராட்சி செயலா் வேத சுப்ரமணியன் வரவேற்றாா்.