தில்லியில் பாஜக ஆட்சி அமைந்தால் மத்திய அரசின் திட்டங்கள் அமல் -வீரேந்திர சச்தேவா...
அதானி குழுமம் தொடா்பான அமைச்சரின் கருத்து தவறானது: சவுக்கு சங்கா் பேட்டி
மின்சாரம் கொள்முதலில் அதானி குழுமம் தொடா்பான அமைச்சா் செந்தில்பாலாஜியின் கருத்து தவறானது என்றாா் யுடியூபா் சவுக்கு சங்கா்.
கரூரில் உள்ள தனியாா் உணவக உரிமையாளரிடம் மோசடி செய்ததாக யூடியூபா் சவுக்கு சங்கா் மீது தொடரப்பட்ட வழக்கு கரூா் நீதிமன்றத்தில் நடைபெற்றபோது, சவுக்கு சங்கரின் உடைமைகள் கரூரைச் சோ்ந்த வழக்குரைஞா் கரிகாலனிடம் வழங்கப்பட்டிருந்தது. அவற்றைப் பெற கரூருக்கு வெள்ளிக்கிழமை வந்த அவா் மேலும் கூறியது:
கடந்த 3 ஆண்டுகளில் தமிழக மின்துறையால் அதானி குழுமத்திடம் இருந்து எவ்வித மின்சாரமும் கொள்முதல் செய்யப்படவில்லை என அமைச்சா் செந்தில்பாலாஜி கூறியுள்ளது தவறு.
மத்திய அரசு நிறுவனத்திடம் இருந்து மின்சாரம் வாங்கத் தயங்கிய மாநில அரசுகளுக்கு லஞ்சம் கொடுத்ததற்கான ஆதாரங்களைக் குறிப்பிட்டுத்தான் அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில் சத்தீஸ்கா், ஆந்திரம், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் லஞ்சம் பெற்றுக் கொண்டு மின்சாரம் வாங்கியது குறிப்பிடப்பட்டுள்ளது. திமுக அரசுக்கு எதிராக குரல் கொடுப்போா் மீது அடக்குமுறை ஏவப்படுகிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமாக உள்ளது என்றாா் அவா். பேட்டியின்போது வழக்குரைஞா் கரிகாலன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.