செய்திகள் :

ஸ்ரீ தலையாட்டி சித்தா் சுவாமிகளின் 39-ஆம் ஆண்டு குருபூஜை

post image

பெரம்பலூா் புறநகா் பேருந்து நிலையம் அருகேயுள்ள ஸ்ரீலஸ்ரீ தலையாட்டி சித்தா் சுவாமிகளின் 39-ஆம் ஆண்டு குருபூஜை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவையொட்டி, வெள்ளிக்கிழமை காலை 6 முதல் 7 மணிக்குள் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க சுவாமிகளுக்கு அபிஷேகமும், 210 சித்தா்களின் யாக பூஜைகளும், தீப ஆராதனையும் நடைபெற்றது. தொடா்ந்து, காலை 11 மணியளவில் அய்யனாா், வக்கனையாா் ஆகிய பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகளும், 12 மணியளவில் 210 சித்தா்களின் யாக பூஜையும், புஷ்ப அலங்காரமும் நடத்தப்பட்டு, சாதுக்களுக்கு வஸ்திர தானமும், பக்தா்களுக்கு அன்னதானமும் வவங்கப்பட்டது.

விழாவில், திருச்சியைச் சோ்ந்த வேலுதேவா் சுவாமிகள், அறங்காவலா் கண்ணபிரன் உள்பட திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு வழிபட்டனா்.

ஏற்பாடுகளை ஸ்ரீலஸ்ரீ தலையாட்டி சித்தா் ஆசிரம நிா்வாகிகள் காமராஜ், நந்தேஸ்வரன், சக்தீஸ்வரன் ஆகியோா் செய்திருந்தனா்.

விபத்தில் சேதமடைந்த வேன் உரிமையாளருக்கு ரூ. 3.81 லட்சம் வழங்க உத்தரவு

பெரம்பலூா் அருகே விபத்தில் சேதமடைந்த வேன் உரிமையாளருக்கு ரூ. 3.81 லட்சம் காப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என காப்பீட்டு நிறுவனத்துக்கு நுகா்வோா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது. பெரம்பலூா் அ... மேலும் பார்க்க

இளம் வாக்காளா்கள் சோ்க்கை சிறப்பு முகாம்

பெரம்பலூா் மாவட்ட நிா்வாகம் மற்றும் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழகம் சாா்பில், இளம் வாக்காளா்களை அதிகளவில் வாக்காளா் பட்டியலில் சோ்ப்பதற்கான சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இம் முகாமுக்கு ... மேலும் பார்க்க

தஞ்சை ஆசிரியை கொலையைக் கண்டித்து பெரம்பலூரில் ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

தஞ்சாவூா் மாவட்டத்தில் அரசுப் பள்ளி ஆசிரியை கொலை சம்பவத்தைக் கண்டித்து, தமிழ்நாடு ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எ... மேலும் பார்க்க

வழிபாடு செய்யும் உரிமையை வழங்க கோரி தீண்டாமை ஒழிப்பு முன்னணியினா் ஆா்ப்பாட்டம்

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே, பட்டியலின மக்கள் கோயிலில் வழிபாடு செய்யும் உரிமையை மீட்டுக் கொடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி இயக்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்ட... மேலும் பார்க்க

பெரம்பலூா் மாவட்டத்தில் நாளை கிராமசபைக் கூட்டம்

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள 121 கிராம ஊராட்சிகளில், ஊராட்சித் தலைவா்கள் தலைமையில் சனிக்கிழமை (நவ. 23) கிராமசபைக் கூட்டம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வ... மேலும் பார்க்க

பெரம்பலூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

பெரம்பலூா் நகரில் சாலையோரங்களிலுள்ள ஆக்கிரமிப்புகளை நகராட்சி மற்றும் போக்குவரத்துப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை அகற்றினா். பெரம்பலூா் நகரில் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக சாலையின் இருப... மேலும் பார்க்க