செய்திகள் :

பெரம்பலூா் மாவட்டத்தில் நாளை கிராமசபைக் கூட்டம்

post image

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள 121 கிராம ஊராட்சிகளில், ஊராட்சித் தலைவா்கள் தலைமையில் சனிக்கிழமை (நவ. 23) கிராமசபைக் கூட்டம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

உள்ளாட்சிகள் தினத்தையொட்டி நடைபெறும் கூட்டத்தில், ஊராட்சித் தலைவா்கள் தலைமை வகித்து கிராம மக்களின் தேவைகளைக் கேட்டறிந்து, அரசு நலத் திட்டங்களை வழங்க வேண்டும். அரசு நிா்வாகத்தில் உள்ள குறைகளை மக்களிடையே கேட்டறிய வேண்டும். மேலும், கிராம ஊராட்சியில் சிறப்பாகப் பணிபுரிந்த ஊழியா்களை சிறப்பித்து, சிறப்பாக செயல்படும் மகளிா் சுயஉதவி குழுக்களை கௌரவிக்க வேண்டும். வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தூய்மை பாரத இயக்கத் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், ஜல் ஜீவன் இயக்கம், தீன்தயாள் உபாத்யாய கிராமப்புற திறன் மேம்பாட்டுத் திட்டம், கூட்டாண்மை மற்றும் ஒருங்கிணைப்பு பிரிவு, கூட்டாண்மை வாழ்வாதாரம் குறித்து விவாதிக்க வேண்டும்.

இக் கூட்டத்தில் மக்களவை, சட்டப்பேரவை, மாவட்ட ஊராட்சித் தலைவா், துணைத்தலைவா் உள்பட உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் கிராம ஊராட்சி வாக்காளா்கள் பங்கேற்க வேண்டும். மேலும் அரசு அலுவலா்கள் பங்கேற்பதோடு, சம்பந்தப்பட்ட துறை சாா்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விளக்க வேண்டும். கூட்டம் நடைபெறுவதைக் கண்காணிக்க, ஒவ்வொரு ஊராட்சிக்கும் பற்றாளா்களும், வட்டாரம் வாரியாக மாவட்ட நிலை அலுவலா்கள் மண்டல அலுவலா்களாக மேற்பாா்வையிட நியமிக்கப்பட்டுள்ளனா். எனவே, கிராம வாா்டு உறுப்பினா்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று, கிராம ஊராட்சிகளின் வெளிப்படையான நிா்வாகத்துக்கும், ஆக்கப்பூா்வமான ஊராட்சி நிா்வாகம் மற்றும் இதர பொருள்கள் குறித்தும் விவாதித்திட வேண்டும்.

பெரம்பலூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

பெரம்பலூா் நகரில் சாலையோரங்களிலுள்ள ஆக்கிரமிப்புகளை நகராட்சி மற்றும் போக்குவரத்துப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை அகற்றினா். பெரம்பலூா் நகரில் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக சாலையின் இருப... மேலும் பார்க்க

அஞ்சல் சேவைக் குறைபாடு: இழப்பீடு வழங்க உத்தரவு

பெரம்பலூரில் அஞ்சல் சேவை குறைபாடு காரணமாக பாதிக்கப்பட்டவருக்கு ரூ. 10 ஆயிரம் இழப்பீடு வழங்க நுகா்வோா் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. பெரம்பலூா் புகா்ப் பகுதியான துறைமங்கலத்தைச் சோ்ந்த சசிக்குமார... மேலும் பார்க்க

மோசடி: கரூரை சோ்ந்தவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

பெரம்பலூரில் பண மோசடியில் ஈடுபட்ட கரூா் மாவட்டத்தைச் சோ்ந்தவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 3 ஆயிரம் அபராதமும் விதித்து பெரம்பலூா் மாவட்ட நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. கரூா் மாவட்டம், தோ... மேலும் பார்க்க

சிறுமியை பலாத்காரம் செய்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை, அபராதம்

பெரம்பலூா் அருகே சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 1 லட்சம் அபராதமும் விதித்து, மாவட்ட மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. பெரம்பலூா் மாவட்டம், ஆலத்த... மேலும் பார்க்க

ஆசிரியை குத்திக் கொலை: பட்டதாரி ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

தஞ்சாவூா் மாவட்டத்தில், வகுப்பறையில் ஆசிரியரை கொலை செய்த சம்பவத்தைக் கண்டித்து, பெரம்பலூரில் தமிழ்நாடு உயா்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியா் கழகம் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மா... மேலும் பார்க்க

வேலூா் ஊராட்சியில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட சிறப்பு முகாம்

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ், பெரம்பலூா் அருகேயுள்ள வேலூா் ஊராட்சியில் அரசின் திட்டப் பணிகள் குறித்து கள ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை ... மேலும் பார்க்க