செய்திகள் :

கோவை: போதைப்பொருள்கள் விற்ற 10 பேர் கைது

post image

கோவையில் பல்வேறு பகுதிகளில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்கள் விற்பனை செய்த 10 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சம் மதிப்பிலான கஞ்சா உள்ளிட்ட 510 போதை மாத்திரைகள், 7 கைப்பேசிகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்தனர்.

கோவை மாநகரப் பகுதியில் கஞ்சா, போதைப் பொருள் மற்றும் போதை ஊசி ஆகியவற்றுக்கு இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் அடிமை ஆவதை தடுக்க மாநகர காவல் ஆணையா் வே.பாலகிருஷ்ணன் சிறப்பு படை போலீஸ் அமைத்து உத்தரவிட்டுள்ளார்.

அவரது உத்தரவின்பேரில் துணை ஆணையா்கள் ஸ்டாலின், சரவணகுமாா் ஆகியோா் மேற்பாா்வையில் போலீஸாா் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா். இது தொடா்பாக அடிக்கடி வாகனத் தணிக்கையும் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், துணை ஆணையா் சரவணகுமாா் மேற்பாா்வையில், குனியமுத்தூா் உதவி ஆணையா் அஜய், கரும்புக்கடை ஆய்வாளா் தங்கம் ஆகியோா் தலைமையில் போலீஸாா் உக்கடம் ஆத்துப்பாலம் அருகே உள்ள சுண்ணாம்புக் காளவாய் பகுதியில் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.

இதையும் படிக்க |வங்கக் கடலில் நாளை புயல் சின்னம் உருவாகுகிறது

அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை தடுத்து நிறுத்தி அதில் இருந்தவா்களிடம் விசாரணை நடத்தினா். விசாரணையில் அவா்கள், போதை மாத்திரைகளை விற்பனை செய்யும் கும்பலைச் சோ்ந்தவா்கள் என்பதும், வெளியூா்களில் இருந்து போதை மாத்திரைகளை வாங்கி அவற்றை கோவைக்கு கடத்தி வந்து கல்லூரி மாணவா்களை குறிவைத்து விற்பனை செய்து வருவதும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து போதை மாத்திரை விற்பனை செய்த மதுரை மாவட்டம், பேரையூரைச் சோ்ந்த பிரகாஷ் (31), கோவை கரும்புக்கடையைச் சோ்ந்த முகமது நெளபல் (29), முஜிப் ரஹ்மான் (29), ரிஸ்வான் சுஹைல் (24), முகமது சபீா் (24), மன்சூா் ரஹ்மான் (27), சனூப் (27), முஜிபுா் ரஹ்மான் (32), அனீஸ் ரஹ்மான் (22), சா்ஜுன் (27), கோவை, சேலம், ஈரோடு பகுதிகளைச் சேர்ந்த 10 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து ரூ.2 லட்சம் மதிப்பிலான கஞ்சா உள்ளிட்ட 500 போதை மாத்திரைகள், 7 கைப்பேசிகள், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர். இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதல்வர் திறந்துவைத்த பட்டாபிராம் டைடல் பூங்கா: சிறப்பம்சங்கள்!

திருவள்ளூர் மாவட்டம், பட்டாபிராமில் ரூ.330 கோடி செலவில் 21 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள மாபெரும் டைடல் பூங்காவைமுதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று(நவ. 22) திறந்து வைத்தார்.தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும்... மேலும் பார்க்க

அதிமுகவில் உள்கட்சி மோதல்: போர்க்களமாக மாறிய நெல்லை,கும்பகோணம் கள ஆய்வுக் கூட்டம்

நெல்லை, கும்பகோணத்தில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் எஸ்.பி.வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற அதிமுக கள ஆய்வுக் கூட்டங்களில் நிர்வாகிகளிடையே ஏற்பட்ட உள்கட்சி மோதலால் தொண்ட... மேலும் பார்க்க

திமுகவை விமர்சித்தாலே சங்கியா? - சீமான்!

திமுகவை விமர்சித்தாலே சங்கியா என்று தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.சென்னை போயஸ் காா்டனில் உள்ள ரஜினிகாந்தின் இல்லத்துக்கு வ... மேலும் பார்க்க

28 மின்சார ரயில்கள் ரத்து: கூடுதல் பேருந்துகள் இயக்கம்!

சென்னை கடற்கரை - திருமால்பூர் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், கூடுதலாக மாநகரப் பேருந்துகள் இயக்கப்படும் என்று மாநகரப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்து... மேலும் பார்க்க

லாரியில் ரகசிய அறை வைத்து கஞ்சா கடத்தல்: 300 கிலோ கஞ்சா பறிமுதல், 3 பேர் கைது

லாரியில் ரகசிய அறை வைத்து ஆந்திர மாநிலத்தில் இருந்து தஞ்சாவூர் மாவட்டத்துக்கு கடத்தி வந்த 300 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த சிறப்பு தனிப்படை போலீசார், இதுதொடர்பாக 3 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்... மேலும் பார்க்க

மேட்டூரில் தாபா ஹோட்டலில் தீ விபத்து:ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்

மேட்டூர்: சேலம் மாவட்டம் மேட்டூரில் தாபா ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.2 மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. மேட்டூர் மாதையன் குட்டையை சேர்ந்தவர் பிரகாஷ்(35). இவர் மேட்டூர் அரசினர் தொழிற்பயிற்ச... மேலும் பார்க்க