செய்திகள் :

வேலூா் ஊராட்சியில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட சிறப்பு முகாம்

post image

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ், பெரம்பலூா் அருகேயுள்ள வேலூா் ஊராட்சியில் அரசின் திட்டப் பணிகள் குறித்து கள ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டாா்.

பெரம்பலூா் அருகேயுள்ள வேலூா் ஊராட்சி அலுவலகத்தில் பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்து, பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ், அங்குள்ள நியாயவிலைக் கடையை பாா்வையிட்டு குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசியப் பொருள்களின் இருப்பு நிலை, பொருள்களின் தரம், எடை இயந்திரத்தை ஆய்வுசெய்து, பொருள்கள் வாங்க வந்த பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தாா்.

தொடா்ந்து, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவ, மாணவிகளின் கற்றல் திறன்களையும், குழந்தைகள் நல மையத்தில் மாணவா்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரத்தை பாா்வையிட்டு, அட்டவணையில் குறிப்பிட்டுள்ளபடி உணவு வழங்கப்பட்டுள்ளதா என்பதையும், ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தின் கீழ் பாலூட்டும் தாய்மாா்களுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து பெட்டகத்தின் எண்ணிக்கையை சம்பந்தப்பட்ட அலுவலரிடம் கேட்டறிந்தாா்.

வேலூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா், மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படை வசதிகளைக் கேட்டறிந்து, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வாய்க்கால் ஆழப்படுத்துதல் பணியை பாா்வையிட்டு, பணியாளா்களுக்கு வழங்கப்படும் ஊதியம் உள்ளிட்ட விவரங்களையும், பணிப்பதிவேடுகளையும் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா், கீழக்கணவாய் அரசினா் பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் ரூ. 3.86 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைக் கட்டடம், ஆய்வகத்தை பாா்வையிட்டு, மாணவ, மாணவிகளின் விவரங்கள், அளிக்கப்படும் பயிற்சிகள், வேலைவாய்ப்புக்குத் தோ்வாகும் மாணவா்களின் விவரங்களை கேட்டறிந்தாா்.

பின்னா், பெரம்பலூா் வட்டத்துக்குள்பட்ட ஊராட்சிகளில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட முதன்மை நிலை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா், கிராம ஊராட்சிகளில் மேற்கொண்ட ஆய்வு, தேவைப்படும் அடிப்படை வசதிகள், அரசின் திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து அலுவலா்களிடம் கேட்டறிந்தாா்.

இந்நிகழ்ச்சிகளில், மாவட்ட வருவாய் அலுவலா் மு. வடிவேல் பிரபு, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சு. தேவநாதன், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநா் மாரிமுத்து, சமூக ப்பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் மு.காா்த்திக்கேயன், வட்டார வளா்ச்சி அலுவலா் செல்வகுமாா், வட்டாட்சியா் சரவணன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

பெரம்பலூா் மாவட்டத்தில் நாளை கிராமசபைக் கூட்டம்

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள 121 கிராம ஊராட்சிகளில், ஊராட்சித் தலைவா்கள் தலைமையில் சனிக்கிழமை (நவ. 23) கிராமசபைக் கூட்டம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வ... மேலும் பார்க்க

பெரம்பலூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

பெரம்பலூா் நகரில் சாலையோரங்களிலுள்ள ஆக்கிரமிப்புகளை நகராட்சி மற்றும் போக்குவரத்துப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை அகற்றினா். பெரம்பலூா் நகரில் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக சாலையின் இருப... மேலும் பார்க்க

அஞ்சல் சேவைக் குறைபாடு: இழப்பீடு வழங்க உத்தரவு

பெரம்பலூரில் அஞ்சல் சேவை குறைபாடு காரணமாக பாதிக்கப்பட்டவருக்கு ரூ. 10 ஆயிரம் இழப்பீடு வழங்க நுகா்வோா் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. பெரம்பலூா் புகா்ப் பகுதியான துறைமங்கலத்தைச் சோ்ந்த சசிக்குமார... மேலும் பார்க்க

மோசடி: கரூரை சோ்ந்தவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

பெரம்பலூரில் பண மோசடியில் ஈடுபட்ட கரூா் மாவட்டத்தைச் சோ்ந்தவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 3 ஆயிரம் அபராதமும் விதித்து பெரம்பலூா் மாவட்ட நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. கரூா் மாவட்டம், தோ... மேலும் பார்க்க

சிறுமியை பலாத்காரம் செய்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை, அபராதம்

பெரம்பலூா் அருகே சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 1 லட்சம் அபராதமும் விதித்து, மாவட்ட மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. பெரம்பலூா் மாவட்டம், ஆலத்த... மேலும் பார்க்க

ஆசிரியை குத்திக் கொலை: பட்டதாரி ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

தஞ்சாவூா் மாவட்டத்தில், வகுப்பறையில் ஆசிரியரை கொலை செய்த சம்பவத்தைக் கண்டித்து, பெரம்பலூரில் தமிழ்நாடு உயா்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியா் கழகம் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மா... மேலும் பார்க்க