செய்திகள் :

Maharashtra, Jharkhand Election Results: `பாஜக கூட்டணி vs காங்கிரஸ் கூட்டணி' ஆட்சியமைக்கப் போவது யார்? | Live

post image

ஜார்க்கண்ட் மாநிலத்​தின் சட்டமன்றத் தேர்தல் இரண்டு கட்டமாக நடந்து முடிந்திருக்கிறது. 81 தொகுதிகள் இருக்கும் ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதற்கட்டத் தேர்தல், 43 தொகுதிகளுக்கு கடந்த 13-ம் தேதியும், மீதமிருந்த 38 தொகுதிகளுக்கு 20-ம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்திருக்கிறது. இந்தத் தேர்தலுக்கு முன்பு, ஜார்க்கண்ட் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவருமான ஹேமந்த் சோரன் அமலாக்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு 5 மாதங்களுக்குப் பிறகு ஜூலை 28-ம் தேதி ஜாமீனில் வெளிவந்தார்.

சம்பாய் சோரன், ஹேமந்த் சோரன்

ஹேமந்த் சோரன் முதல்வர் பதவிக்கு வந்ததும், கட்சியின் முக்கிய நிர்வாகியான சம்பாய் சோரன் கட்சியிலிருந்து விலகி பா.ஜ.க-வில் ஐக்கியமானார். இந்த நிலையில்தான் ஜார்க்கண்ட் மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது.

இந்த தேர்தலில் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணிக்கும், சம்பாய் சோரனை முன்னிறுத்தி, பா.ஜ.க தலைமை வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் நேரடி போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை காலை 8 மணி முதல் எண்ணப்படுகிறது.

மகாராஷ்டிர மாநிலத்தின் 288 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடந்து முடிந்திருக்கிறது. இந்த தேர்தலில், காங்கிரஸ், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மகா விகாஸ் அகாடி (MAVIA) கூட்டணியில் களம் காண்கின்றன. மறுபுறம், பா.ஜ.க, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மகாயுதி கூட்டணியில் தேர்தலை எதிர்க்கொண்டிருக்கின்றன.

உத்தவ் மற்றும் ஏக்நாத் ஷிண்டே | சிவசேனா

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மகா விகாஸ் அகாடி கூட்டணி வெற்றிப் பெற்றது. அதனால், சட்டமன்றத் தேர்தலிலும் அதே வெற்றி மீண்டும் உறுதிசெய்யப்படலாம் என அரசியல் வல்லுநர்கள் நம்புகின்றனர். ஆனால், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மகாயுதி அரசு, மாநிலம் முழுவதும் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி தேர்தலில் மீண்டும் களமிறங்கியிருக்கிறது. எனவே இந்தத் தேர்தலில் வெல்லப்போவது யார் என்ற கேள்வி தீவிரமாகியிருக்கிறது. இந்நிலையில் இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை காலை 8 மணி முதல் எண்ணப்படுகிறது.

`பயத்திலிருந்து வரக்கூடிய கருத்துகள்தான் அவை' – ஜெயக்குமாரின் கருத்துக்கு கனிமொழி பதில்!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில், கலைஞர் 100 வினாடி வினா அரை இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் திமுக எம்.பி கனிமொழி பங்கேற்று போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு வாழ்த்துகள்... மேலும் பார்க்க

அதிமுக-வில் அடிதடி; SEEMAN போடும் புது கணக்கு? | ADANI | MODI | BJP | DMK | STALIN | Imperfect Show

* “ரஷ்யாவைத் தாக்க ஏவுகணை வழங்கும் நாடுகளை ரஷ்யா தாக்கும்” - அதிபர் புதின் * ரஷ்யாவை எச்சரிக்கும் பிரான்ஸ்? * போர்க்குற்ற விவகாரத்தில் இஸ்ரேல் பிரதமருக்கு எதிராகக் கைது வாரண்ட் * 44,000 கடந்த காஸா உயி... மேலும் பார்க்க

`நாம் ஒற்றுமையாக இருக்கணும்' - மோதிக்கொண்ட கட்சி நிர்வாகிகள்; அறிவுறுத்திய வேலுமணி - நடந்தது என்ன?

திருநெல்வேலியில் இன்று அதிமுக கள ஆய்வுக் கூட்டம் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் நடைபெற்றது.இந்த ஆய்வுக் கூட்டத்தில் கழக நிர்வாகிகள், அதிமுக தொண்டர்கள் என பலரும் கலந்துகொண்டார்கள். இந்த ... மேலும் பார்க்க

நெல்லை அதிமுக ஆய்வுக் கூட்டம்: முன்னாள் அமைச்சர் முன்னிலையில் மோதிக்கொண்ட நிர்வாகிகள்!

2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், அ.தி.மு.க சார்பாக தமிழ்நாடு முழுவதும் மாவட்டந்தோறும் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், நெல்லை மாவட்ட ஆய்வுக் கூட்டத்தின் பொறுப்பாள... மேலும் பார்க்க

```நெருப்பில்லாமல் புகையாது'; அதானியுடன் தமிழக அரசு ஒப்பந்தம்..?"- பிரேமலதா விஜயகாந்த் காட்டம்

அதானி குழுமத்திற்கும், தமிழக அரசுக்கும் இடையே உள்ள மின்வாரிய ஒப்பந்தம் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று தே.மு.தி.க தலைவர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்திருக்கிறார்.இதுதொடர்பாக ... மேலும் பார்க்க