செய்திகள் :

`சம்பாதிக்கும் பணமெல்லாம் குடிநீர் வாங்கவே செலவாகிறது' - க.தர்மத்துப்பட்டி கிராம மக்கள் வேதனை

post image

திண்டுக்கல் மாவட்டம், க.தர்மத்துப்பட்டி கிராமத்தில் பொதுமக்கள் தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தும் நிலை உள்ளது. சில வருடங்களாகவே ஊராட்சி நிர்வாகம், குடிநீர் மற்றும் இதர தேவைகளுக்கான தண்ணீரினை சரியாக அளிப்பதில்லை என்ற புகார் உள்ளது. உள்ளூர் பொதுமக்கள் இது குறித்து பலமுறை புகார் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுத்த பாடில்லை. அன்றாடம் கூலி வேலைக்குச் செல்லும் பொதுமக்கள் அதிகமான அளவில் உள்ள இந்த கிராமத்தில் குறைந்த அளவே குடிநீர் குழாய்கள் இணைப்பு இருந்து வந்தது. அதனால் சில மாதங்களுக்கு முன்பு ஒவ்வொரு தெருவுக்கும் வீடு வீடாக குடிநீர் இணைப்பு போட குழாய் பதிக்கப்பட்டது. ஆனால் இன்றுவரை அந்த பணி முழுமை அடையாமல் பாதியிலேயே நிற்கிறது.

பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்ட குழாய் பதிக்கும் வேலையினால் ஒவ்வொரு தெருவிலும் பொதுமக்கள் நடப்பதற்கும் வாகனங்கள் செல்வதற்கும் சிரமமாகவே உள்ளது. குடிநீர் தேவையை சரி செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட வேலையும் பாதியில் இருப்பதால் பொதுமக்கள் மிகவும் வருத்தம் அடைந்துள்ளனர். மேலும் அன்றாட கூலி வேலைக்குச் சென்று தங்கள் தேவைகளை சரி செய்து கொள்ளும் கிராம மக்கள், குடிநீரை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்துவது மிகவும் வருந்தக்கூடிய செயலாகும்.

இது குறித்து பொதுமக்கள் கூறியபோது, ``எங்களது சம்பளத்தில் ஒரு பகுதி அளவு குடிநீர் வாங்க உபயோகித்து விட்டால்... மற்ற செலவுகளுக்கு என்ன செய்வது? கிராமத்தில் குடிநீர் குழாய்களுக்கு மேலாக குடிநீர் விற்கும் தண்ணீர் வண்டிகள் அதிகமாகி விட்டன என்றே தோன்றுகிறது. ஏனெனில் குடிநீர் குழாய்களின் செயல்பாடுகள் கேள்விக்குறியான விஷயமாகவே உள்ளது. செழிப்பான ஒரு கிராமத்தில் இருந்து கொண்டு குடிநீர் தேவைக்கும் மற்ற நீர் தேவைக்கும் அல்லல்படுவது எங்களுக்கு வேதனையாக உள்ளது" என்று வருத்தம் தெரிவிக்கின்றனர். இது குறித்து ஊராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.

மேலும் இந்த கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பல வருடங்களாகச் சுற்றியுள்ள சாக்கடை திறந்த வெளியில் உள்ளது. பள்ளிக்கு மிக அருகில் அபாயகரமான நிலையில் பராமரிக்கப்படாத குளம் உள்ளது. பல வருடங்களுக்கு முன்பு ஒரு குழந்தை இதில் இறந்தது குறிப்பிடத்தக்கது. முக்கிய நீர்நிலை ஆதாரமாக இருந்த இந்த குளம் இன்று மிகவும் மோசமான நிலையில் உள்ளது. ஐந்து முதல் பத்து வயது வரை படிக்கும் குழந்தைகள் உள்ள பள்ளியில் அவர்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியமான ஒன்று.

இது குறித்து தர்மத்துப்பட்டி ஊராட்சி தலைவர் மருதமுத்துவை தொடர்பு கொண்டு பேசியபோது, "நான் இன்னும் 60 நாள்களில் பணி ஓய்வு பெறப் போகிறேன். ஊராட்சியில் அதிகாரிகளுக்கு இடையே பல வேறுபாடுகளும் பிரச்னைகளும் உள்ளது. முன்னெடுக்கிற செயல்களை தடுக்கிறார்கள். இது குறித்து பி.டி.ஒ அவர்களிடம்தான் பேச வேண்டும்" என்று கூறினார். அவரிடம் தொலைபேசி எண்ணை வாங்கி, பி.டி.ஒ மலரவனைத் தொடர்பு கொண்டபோது, "குழாய் இணைப்பு போடும் பணி செயல்பாட்டில் உள்ளது. மேலும் இந்த புகார்கள் குறித்து அதிகாரிகளிடம் கூறியுள்ளேன். ஒரு சில நாள்களில் ஆய்வு மேற்கொள்வோம்" என்றார்.

ஆப்கானிஸ்தான்: இஸ்லாமுடன் முரண்படும் நூல்களுக்குத் தடை விதிக்கும் தாலிபன்கள்!

ஆப்கானிஸ்தானில் இறக்குமதி செய்யப்பட்ட புத்தகங்களை சோதனை செய்தல், தடை செய்யப்பட்ட தலைப்புகளின் கீழுள்ள புத்தகங்களை நூலகங்களிலிருந்து அகற்றுதல் மற்றும் அதன் விநியோகத்தை தடுத்தல் போன்ற இஸ்லாமுக்கு மாறான ... மேலும் பார்க்க

``சீமான் அறிவிக்கப்படாத எதிர்க்கட்சித் தலைவர்” - அதிமுகவை சீண்டும் NTK மணிசெந்தில்

``நாம் தமிழர் கட்சியின் பொறுப்பாளர்கள் விலகுவது தொடர்கதையாகிவிட்டதே... உங்கள் கட்சியில் என்ன பிரச்னை?” ``வளர்ந்துவரும் அரசியல் கட்சியிலிருந்து நிர்வாகிகள் விலகுவதும், இணைவதும் போன்ற சாதாரண நிகழ்வுகளை ... மேலும் பார்க்க

Tourism: சென்னை ஈ.சி.ஆரில் கப்பல் சவாரி; பார்ட்டி, DJ கொண்டாட்டம், உணவகம்... விலை சரியாக இருக்குமா?

மும்பை, ஹைதராபாத், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் மக்களின் பொழுதுபோக்கிற்காக கப்பல் சவாரி கொண்டுவரப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. அப்படியான கப்பல் சவாரியைச் சென்னையிலும் கொண்டுவருவது என்பது நீண்... மேலும் பார்க்க

குருமலை: தொட்டில் கட்டி தூக்கிவரப்பட்ட கர்ப்பிணி; மலைவாழ் மக்களின் வேதனை தீர்வது எப்போது?

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையையொட்டிய ஆனைமலை புலிகள் காப்பகப் பகுதியில் குருமலை, குழிப்பட்டி, மாவடப்பு, பூச்சிக்கொட்டாம்பாறை உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் குடியிருப்புகள் உள்ளன. இங... மேலும் பார்க்க

சல்லி சல்லியாய் நொறுங்கும் ஆம் ஆத்மி?! - சபதத்தை நிறைவேற்றுவாரா அரவிந்த் கெஜ்ரிவால்?

டெல்லி ஆத் ஆத்மி அரசின் அமைச்சரவையிலிருந்தும் கட்சியிலிருந்தும் தன்னை விடுவித்துக்கொண்ட போக்குவரத்து துறை அமைச்சர் கைலாஷ் கெலாட், கட்சியிலிருந்து விலகிய கையோடு பா.ஜ.க-வில் இணைந்திருக்கிறார். ஒரே ஆண்டி... மேலும் பார்க்க

`ஒடுக்குமுறைக்கு எதிரான குரல் அது...' - பெண்கள் உரிமைக்காக போராடும் ஆப்கன் சிறுமிக்கு அமைதிப் பரிசு!

ஆப்கானிஸ்தானின் காபூலில் பெண் குழந்தைகளின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வாதிட்ட 17 வயது சிறுமி நிலா இப்ராஹிமிக்கு, அவரின் சிறப்புப் பணியை பாராட்டி மதிப்புமிக்க சர்வதேச குழந்தைகள் அமைதி பரிசு செவ்வாய் ... மேலும் பார்க்க