ஆக்கிரமிப்பு அகற்றம்: போக்குவரத்து காவல் துணை ஆணையா் கள ஆய்வு
இந்திய கடற்படை நீர்மூழ்கி கப்பலுடன் மோதிய மீன்பிடி படகு: 2 மீனவர்கள் மாயம்
இந்திய கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பலுடன் மீன்பிடி படகு மோதியதில் 2 மீனவர்கள் மாயமானதாக அதிகாரி வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
கோவா கடற்கரையில் இருந்து 70 கடல் மைல் தொலைவில் மர்தோமா என்ற படகில் இந்திய மீனவர்கள் 13 பேர் வியாழக்கிழமை மாலை மீன்பிடித்துக்கொண்டிருந்தனர்.
அப்போது இந்திய கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பலுடன் மீன்பிடி படகு திடீரென மோதியதாகக் கூறப்படுகிறது. இதில் அப்படகு நீரில் மூழ்கியது.
மகாராஷ்டிரத்தில் மோதும் மகா கூட்டணிகள்! வெற்றி யாருக்கு?
உடனே ஆறு கப்பல்கள் மற்றும் விமான உதவியுடன் கடலில் தத்தளித்த மீனவர்களை மீட்கும் பணி நடைபெற்றது.
இந்த சம்பவத்தில் இதுவரை 11 பணியாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர் என்று இந்திய கடற்படை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
மாயமான 2 மீனவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மேலும் சம்பவம் தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு கடற்படை உத்தரவிட்டுள்ளது. இதனால் கோவா கடற்பரப்பில் பரபரப்பு நிலவியது.