நல்லூரில் வருமுன் காப்போம் திட்ட முகாம்
நல்லூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த முகாமிற்கு நல்லூா் பேரூராட்சி தலைவா் வளா்மதி கிறிஸ்டோபா் தலைமை வகித்தாா். கிள்ளியூா் வட்டார மருத்துவ அலுவலா் ஸ்டாலின் ஜோஸ் முன்னிலை வகித்தாா். முகாமை விளவங்கோடு சட்டப்பேரவை உறுப்பினா் தாரகை கத்பட்
தொடங்கி வைத்தாா். முகாமில் சிறப்பு மருத்துவா்களால் நோயாளிகளுக்கு
சிகிச்சை அளிக்கப்பட்டது. கருவுற்ற தாய்மாா்களுக்கு ஊட்டசத்து பெட்டகம் வழங்கப்பட்டது. இதில் திரளான பொதுமக்கள் பங்கேற்றனா்.
முகாம் ஏற்பாடுகளை கிள்ளியூா் வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் ஐயப்பன் செய்திருந்தாா்.