செய்திகள் :

```நெருப்பில்லாமல் புகையாது'; அதானியுடன் தமிழக அரசு ஒப்பந்தம்..?"- பிரேமலதா விஜயகாந்த் காட்டம்

post image
அதானி குழுமத்திற்கும், தமிழக அரசுக்கும் இடையே உள்ள மின்வாரிய ஒப்பந்தம் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று தே.மு.தி.க தலைவர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்திருக்கிறார்.

இதுதொடர்பாக பேசிய பிரேமலதா விஜயகாந்த், " 'அதானி குழுமத்திற்கும், தமிழக அரசுக்கும் இடையே கடந்த 3 ஆண்டுகளில் எந்த ஒப்பந்தமும் செய்யப்படவில்லை. மின்வாரியம் தொடர்பாக எந்தவித ஒப்பந்தமும் மேற்கொள்ளவில்லை. சமூக ஊடகங்களில் தவறான தகவல் பரவி வருகிறது.

செந்தில் பாலாஜி

இது தொடர்பாக தன்னிடம் நேரடியாகவோ அல்லது மின்துறை அதிகாரிகளுடனோ கேட்டு தெரிந்துகொண்ட பிறகே பதிவிட வேண்டும்' என்று சொல்லும் அமைச்சர் செந்தில் பாலாஜி, இதுபோன்ற ஊழல் குற்றச்சாட்டை மறைத்தாலும், இதன் உண்மை நிலை என்ன என்பதை தமிழக அரசு வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்.

அதுமட்டுமல்லாமல் நீதியரசர்களும் தாமாக முன்வந்து இந்த ஊழல் குற்றச்சாட்டை ஆய்வு செய்து, உண்மையில் ஊழல் நடந்திருக்கிறதா என்பதை கண்டறிய வேண்டும். அமெரிக்கா நீதிமன்றம் அதானி குழுமத்தின் மீது குற்றம்சாட்டி இருக்கிறார்கள் என்றால் 'நெருப்பில்லாமல் புகையாது' என்கின்ற பழமொழிக்கு ஏற்ப, புகாரும், ஊழல் குற்றச்சாட்டும் வரவேண்டியதன் அவசியம் என்ன? என்பது மக்கள் கேள்வியாக உள்ளது.

பிரேமலதா விஜயகாந்த்

எனவே தமிழக அரசு உடனடியாக இதற்கான விளக்கத்தை மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்திருக்கிறார்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/SeenuRamasamyKavithaigal

`நாம் ஒற்றுமையாக இருக்கணும்' - மோதிக்கொண்ட கட்சி நிர்வாகிகள்; அறிவுறுத்திய வேலுமணி - நடந்தது என்ன?

திருநெல்வேலியில் இன்று அதிமுக கள ஆய்வுக் கூட்டம் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் நடைபெற்றது.இந்த ஆய்வுக் கூட்டத்தில் கழக நிர்வாகிகள், அதிமுக தொண்டர்கள் என பலரும் கலந்துகொண்டார்கள். இந்த ... மேலும் பார்க்க

நெல்லை அதிமுக ஆய்வுக் கூட்டம்: முன்னாள் அமைச்சர் முன்னிலையில் மோதிக்கொண்ட நிர்வாகிகள்!

2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், அ.தி.மு.க சார்பாக தமிழ்நாடு முழுவதும் மாவட்டந்தோறும் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், நெல்லை மாவட்ட ஆய்வுக் கூட்டத்தின் பொறுப்பாள... மேலும் பார்க்க

Maharashtra, Jharkhand Election Results: `பாஜக கூட்டணி vs காங்கிரஸ் கூட்டணி' ஆட்சியமைக்கப் போவது யார்? | Live

வெல்லப்போவது யார்?ஜார்க்கண்ட் தேர்தல்ஜார்க்கண்ட் மாநிலத்​தின் சட்டமன்றத் தேர்தல் இரண்டு கட்டமாக நடந்து முடிந்திருக்கிறது. 81 தொகுதிகள் இருக்கும் ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதற்கட்டத் தேர்தல், 43 தொகுதிக... மேலும் பார்க்க

`மணிப்பூர் கலவரத்துக்கு ப.சிதம்பரம் காரணமா?’ - பகீர் குற்றச்சாட்டும் பின்னணியும்!

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மெய்தி, குக்கி சமூக மக்களுக்கு இடையில் மோதல் நடந்து வருகிறது. அதாவது மாநிலத்தின் செல்வாக்கு மிக்கவர்களாக மெய்தி சமூகத்தினர் இருக்கிறார்கள். இந்த சமூகத்தினர் ... மேலும் பார்க்க

அமெரிக்கா: முதல் திருநங்கை செனட்டருக்கு பெண்கள் கழிவறை செல்ல தடை! - என்ன நடந்தது?

அமெரிக்க சட்டமன்றத்தில் முதல் திருநங்கை ஸ்டேட் செனட்டராக பதவியேற்றவர் சாரா மெக்பிரைட். ஜனநாயக கட்சியைச் சேர்ந்த இவர் பெண்களுக்கான கழிவறையை பயன்படுத்த குடியரசு கட்சியைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித... மேலும் பார்க்க