நைஜீரியா, பிரேசில் பயணம்! தலைவர்களுக்கு பரிசுப் பொருள் வழங்கிய பிரதமர் மோடி!
நைஜீரியா, பிரேசில், கயானா சுற்றுப்பயணத்தின் போது தலைவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி பரிசுப் பொருள்களை வழங்கினார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் பிரேசில், நைஜீரியா, கயானா ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். மேலும், 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நைஜீரியா சென்ற பிரதமர் என்ற சிறப்பையும் பெற்றார்.
சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி இந்தியாவில் உள்ள பல்வேறு பகுதிகளில் கிடைக்கும் பல்வேறு வகையான தனித்துவமிக்க பரிசுப் பொருள்களையும் அந்நாட்டுத் தலைவர்களுக்கு வழங்குவதற்காக கொண்டு சென்றிருந்தார்.
அந்தப் பயணத்தின் போது மகாராஷ்டிரத்தில் இருந்து 8 பொருள்கள், ஜம்மு-காஷ்மீரில் இருந்து 5 பொருள்கள், ஆந்திர பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இருந்து தலா 3 பொருள்கள், ஜார்க்கண்டில் இருந்து 2 பொருள்கள் மற்றும் தமிழ்நாடு, கர்நாடகம், உத்தர பிரதேசம், பிகார், ஒடிஸா, லடாக் ஆகிய பகுதிகளில் இருந்து தலா ஒரு பொருளை பரிசுப் பொருளாகக் கொண்டு சென்றிருந்தார் பிரதமர் மோடி.
பிரதமர் நரேந்திர மோடி, மகாராஷ்டிரத்தின் பரிசுகளில் சிலோஃபர் பஞ்சாமிர்த கலசம் நைஜீரியாவின் அதிபருக்கு வழங்கினார். மகாராஷ்டிரத்தின் கோலாப்பூரில் இருந்து பாரம்பரிய கைவினைத்திறனுக்கு ஒரு அற்புதமான எடுத்துக்காட்டான வார்லி ஓவியங்கள் பிரேசில் அதிபருக்கு வழங்கப்பட்டது.
கரிகாம் நாடுகளின் தலைவர்களில் புணேவிலிருந்து தயாரிக்கப்பட்ட வெள்ளி ஒட்டகத் தலையுடன் கூடிய பூ சிலை ஆஸ்திரேலியாவின் பிரதமருக்கு வழங்கப்பட்டது. பாரம்பரிய வடிவமைப்புடன் கையால் செதுக்கப்பட்ட வெள்ளி சதுரங்கப் பலகை போர்த்துகல் பிரதமருக்கு வழங்கப்பட்டது.