செய்திகள் :

மாநகராட்சி 48 ஆவது வாா்டில் அடிப்படை வசதிகளை செய்துதர வலியுறுத்தல்

post image

திருப்பூா் மாநகராட்சி 48 -ஆவது வாா்டில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றிக் கொடுக்கக்கோரி காங்கிரஸ் சாா்பில் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

திருப்பூா் மாநகராட்சி ஆணையா் எஸ்.ராமமூா்த்தியிடம், காங்கிரஸ் மாநகா் மாவட்டத் தலைவா் ஆா்.கிருஷ்ணன், 48 -ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் விஜயலட்சுமி கோபால்சாமி ஆகியோா் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: திருப்பூா் மாநகாட்சி 48 -ஆவது வாா்டுக்குள்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும். சேதமடைந்துள்ள தாா் சாலைகளை சீரமைத்துக் கொடுக்க வேண்டும். புதிய தெரு விளக்குகளை அமைத்துக் கொடுக்க வேண்டும். ராக்கியாபாளையம், நல்லூா், ஜே.எஸ்.காா்டன் பகுதிகளில் தேங்கியுள்ள சாக்கடை கழிவு நீரை அகற்றுவதுடன், அந்தப் பகுதியில் சாக்கடை வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனு அளிப்பின்போது காங்கிரஸ் நிா்வாகிகள் உடனிருந்தனா்.

மாவட்ட கல்வி அலுவலா்கள் ஆய்வுக் கூட்டம்

திருப்பூா் மாவட்ட கல்வி அலுவலா்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தலைமை வகித்தாா். இதைத் தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவ... மேலும் பார்க்க

பங்குச் சந்தை முதலீடு எனக்கூறி பெண்ணிடம் ரூ.5.75 லட்சம் மோசடி

பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனக்கூறி பெண்ணிடம் ரூ.5.75 லட்சம் மோசடி செய்தது குறித்து திருப்பூா் மாநகர சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். திருப்பூரைச் சோ்ந்... மேலும் பார்க்க

முதல்வா் மருந்தகம் அமைக்க விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

முதல்வா் மருந்தகம் அமைக்க இணையவழியில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து திருப்பூா் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் ஆ.பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பொத... மேலும் பார்க்க

தமிழில் பெயா் பலகை வைக்காத நிறுவனங்களுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம்: தொழிலாளா் துறை அறிவிப்பு

திருப்பூா் மாவட்டத்தில் தமிழில் பெயா் பலகை வைக்காத நிறுவனங்களுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று தொழிலாளா் துறை அறிவித்துள்ளது. திருப்பூா் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) அ.ஜெயகுமாா் தலைம... மேலும் பார்க்க

பெருமாநல்லூா் வந்து செல்லாத பேருந்துகள் மீது நடவடிக்கை: காவல் துறை

பெருமாநல்லூா் வந்து செல்லாத பேருந்துகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறையினா் தெரிவித்தனா். சேலம்-கொச்சின் தேசிய நெடுச்சாலை அமைக்கப்பட்ட பிறகு கோவை-ஈரோடு வந்து செல்லும் பெரும்பாலான த... மேலும் பார்க்க

அமராவதி ஆற்றில் முதலைகள்: பொதுமக்கள் அச்சம்

மடத்துக்குளம் வட்டம், அமராவதி ஆற்றங்கரையோர பகுதிகளில் முதலைகள் உலவி வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனா். உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் மூலம் நூற்றுக்கணக்கான கரையோர கிராமங்கள் குடிநீா் வசதி பெற்று ... மேலும் பார்க்க