சநாதன தா்ம வழக்கு: துணை முதல்வா் உதயநிதி மனு பிப்ரவரிக்கு ஒத்திவைப்பு
மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஆய்வு
வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் மலா்விழி வெள்ளிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.
மேட்டுப்பாளையம் ஊராட்சி, மோளக்கவுண்டன்வலசில் சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் ஒரு லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட நீா்த்தேக்கத் தொட்டி அமைக்கும் பணி, அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டத்தின்கீழ் நடைபெற்று வரும் சேமிப்புக் கிடங்கு கட்டுமானப் பணி உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் மலா்விழி ஆய்வு செய்தாா்.
அப்போது, பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடிக்க வேண்டும் என அலுவலா்களை அறிவுறுத்தினா்.
ஆய்வின்போது, ஊராட்சி ஒன்றிய உதவி செயற்பொறியாளா்கள் அழகுராஜா, கிருஷ்ணமூா்த்தி, வட்டார வளா்ச்சி அலுவலா் ராகவேந்திரன், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் பாலமுருகன், மேட்டுப்பாளையம் ஊராட்சி செயலாளா் மணிமாறன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.