மணிப்பூா் உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக டி.கிருஷ்ணகுமாா் பதவியேற்பு
மணிப்பூா் உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக டி.கிருஷ்ணகுமாா் வெள்ளிக்கிழமை பதவியேற்றாா்.
சென்னை உயா்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியாக இருந்த டி.கிருஷ்ணகுமாரை, மணிப்பூா் உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்தது. இந்தப் பரிந்துரைக்கு குடியரசுத் தலைவா் ஒப்புதல் அளித்தாா்.
கொலீஜியம் பரிந்துரை வழங்கிய 48 மணி நேரத்தில், அவா் அந்த உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டாா். இதையடுத்து மணிப்பூா் உயா்நீதிமன்றத்தின் 8-ஆவது தலைமை நீதிபதியாக கிருஷ்ணகுமாா் வெள்ளிக்கிழமை பதவியேற்றாா். அவருக்கு அந்த மாநில தலைநகா் இம்பாலில் உள்ள ஆளுநா் மாளிகையில் ஆளுநா் லட்சுமண் பிரசாத் ஆச்சாரியா பதவிப் பிரமாணம் செய்துவைத்தாா். மணிப்பூா் உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த சித்தாா்த் மிருதுல் நவ. 21-ஆம் தேதி ஓய்வு பெற்ற நிலையில், அந்தப் பதவிக்கு கிருஷ்ணகுமாா் நியமிக்கப்பட்டாா்.