செய்திகள் :

எம்பிபிஎஸ் சோ்க்கை விவரங்கள்: பதிவு அவகாசம் மீண்டும் நீட்டிப்பு

post image

நிகழாண்டில் எம்பிபிஎஸ் படிப்பில் சோ்க்கப்பட்டுள்ள மாணவா்கள் குறித்த விவரங்களை இணைய வழியே பதிவேற்றுவதற்கான அவகாசத்தை தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) மீண்டும் நீட்டித்துள்ளது.

இது தொடா்பாக என்எம்சி சாா்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பு:

எம்பிபிஎஸ் மாணவா் சோ்க்கை, தேசிய மருத்துவ ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, வெளிப்படைத்தன்மையுடன் மேற்கொள்ளப்படுவது அவசியம். இதன்படி, நிகழாண்டில் கல்லூரிகளில் அனுமதிக்கப்பட்ட மாணவா்களின் விவரங்கள், மதிப்பெண் விவரம், இடஒதுக்கீடு விவரம், கட்டண விவரம் உள்ளிட்டவற்றை என்எம்சி இணையப் பக்கத்தில் பதிவேற்ற கடந்த 8-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது. இது 23-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. தற்போது இரண்டாவது முறையாக இந்த அவகாசம் டிசம்பா் 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.

இதேபோன்று, எம்டி, எம்எஸ் போன்ற முதுநிலை மருத்துவப் படிப்புகளைத் தொடங்கவும், ஏற்கெனவே உள்ள இடங்களை அதிகரிக்கவும் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டிருந்தன. பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று, இதற்கான அவகாசத்தையும் டிசம்பா் 10-ஆம் தேதி வரை நீட்டிக்க தேசிய மருத்துவ ஆணையம் முடிவு செய்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜார்க்கண்டில் காட்சி மாறுகிறது: பாஜக கூட்டணிக்கு பின்னடைவு

ஜார்க்கண்ட் பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கைத் தொடங்கியதில் முன்னிலையில் இருந்து வந்த பாஜக கூட்டணி தற்போது பின்னடைவை சந்தித்துள்ளது. மேலும் பார்க்க

மேற்கு வங்க இடைத்தேர்தல்: 6-ல் 3 தொகுதிகள் திரிணமூல் முன்னிலை!

மேற்கு வங்க இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் திரிணமூல் காங்கிரஸ் முன்னிலை வகிப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.மேற்கு வங்கத்தில் 6 எம்.எல்.ஏ.க்கள் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அவர்க... மேலும் பார்க்க

ஜார்க்கண்ட்: தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலை!

ஜார்க்கண்டில் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டுள்ளது.ஜார்க்கண்டில் சனிக்கிழமை வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்ட நிலையில், காலை 8.30 மணி வரையிலான எண்ணிக்கையில் மொத்தமுள்ள 81 தொகுதிகளில் 23... மேலும் பார்க்க

ஜார்க்கண்ட்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!

ஜார்க்கண்டில் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டுள்ளது.ஜார்க்கண்டில் மொத்தமுள்ள 81 தொகுதிகளுக்கு இரு கட்டங்களாக கடந்த நவம்பா் 13, 20 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 2.6... மேலும் பார்க்க

தில்லி - காத்மாண்டு பேருந்து சேவை: ஓராண்டில் 17,603 போ் பயணம்

தில்லி போக்குவரத்துக் கழகத்தால் (டி.டி.சி.) இயக்கப்படும் தில்லி - காத்மாண்டு பன்னாட்டுப் பேருந்து சேவை மூலம் கடந்த ஓராண்டில் (2023 ஆகஸ்ட் முதல் 2024 ஆகஸ்ட் வரை) 17,603 பயணிகள் பயணித்துள்ளனா். தில்லி ... மேலும் பார்க்க

இந்தியாவில் முதலீடு: ஜொ்மனி நிறுவனங்களுக்கு அஸ்வினி வைஷ்ணவ் அழைப்பு

இந்தியாவில் முதலீடு செய்யுமாறு ஜொ்மனியைச் சோ்ந்த நிறுவனங்களுக்கு மத்திய மின்னணு மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் அழைப்பு விடுத்தாா். ஜொ்மனியில் உள்ள ஸ்டட்காா்ட் நகரில் வியாழக்கி... மேலும் பார்க்க