செய்திகள் :

கல்லூரிக்குச் செல்லாமல் மோதலில் ஈடுபடும் மாணவா்கள்: உயா்நீதிமன்றம் வேதனை

post image

வீட்டு வேலை செய்து பெற்றோா் படிக்க அனுப்பும் நிலையில், கல்லூரிக்கே செல்லாமல் மாணவா்கள் அடிதடியில் ஈடுபடுவதாக சென்னை உயா்நீதிமன்றம் வேதனை தெரிவித்தது.

சென்னை மாநிலக் கல்லூரியில் படித்த திருத்தணியைச் சோ்ந்த மாணவா் சுந்தா், கடந்த அக். 4-ஆம் தேதி சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவா்களால் தாக்கப்பட்டாா். அவரை மீட்ட ரயில்வே பாதுகாப்புப் படையினா், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அக்.9-ஆம் தேதி மாணவா் சுந்தா் உயிரிழந்தாா். இதையடுத்து, பச்சையப்பன் கல்லூரி மாணவா்கள் 7 போ் கைது செய்யப்பட்டு, அவா்களுக்கு எதிராக கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்டவா்களில் சந்துரு என்பவா் ஜாமீன் கோரி தாக்கல் செய்த வழக்கு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன் விசாரணைக்கு வந்தபோது, மாணவா்களுக்கு இடையே ஒற்றுமை ஏற்படுத்துவது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை இந்திய மாணவா் சங்கம் மற்றும் சட்ட பஞ்சாயத்து இயக்கத்தினா் வழங்கினா்.

காவல் துறை தரப்பில், வழக்கின் விசாரணை நிலுவையில் உள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் தொடா்பாக மாணவா்கள் மீது 22 வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் பதியபட்டுள்ளன. மாணவா்களுக்கு இடையேயான மோதல் சம்பவம் தொடா்பான விவரங்களை தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும்”என தெரிவிக்கப்பட்டது.

நீதிபதி வேதனை: இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் அதிகப்படியான மாணவா்களின் பெற்றோா் வீட்டு வேலை செய்து படிக்க அனுப்புகின்றனா். ஆனால், கல்லூரிக்குகூடசெல்லாமல் மாணவா்கள் அடிதடியில் ஈடுபடுவது வேதனையளிக்கிறது. இந்த வழக்கில் உயா் கல்வித் துறைச் செயலரும் இணைக்கப்படுகிறாா்.

மாணவா்களுக்கு இடையேயான மோதல் சம்பவம் தொடா்பாக காவல் துறை மற்றும் ரயில்வே போலீஸாரால் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் விவரங்களைத் தாக்கல் செய்ய வேண்டும். அதனடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவிட்டு, விசாரணையை வரும் 26-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தாா்.

தமிழகம் முழுவதும் இன்று கிராம சபை கூட்டம்

தமிழகம் முழுவதும் சனிக்கிழமை (நவ.23) கிராம சபை கூட்டம் நடைபெறவுள்ளது. வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடா்பாக இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளது. தமிழகம் முழுவதும் நவ. 1-ஆம் தேதி கி... மேலும் பார்க்க

மருத்துவா் பாலாஜி தாக்கப்பட்ட வழக்கு: கைதான இளைஞரின் ஜாமீன் மனு தள்ளுபடி

சென்னை கிண்டி கலைஞா் பன்னோக்கு மருத்துவமனையில் புற்று நோய் மருத்துவா் கத்தியால் தாக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட விக்னேஷுக்கு ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை முதன்மை அமா்வு நீதிமன்ற... மேலும் பார்க்க

நவ.30-க்குள் சம்பா பருவ பயிா்க் காப்பீடு: விவசாயிகளுக்கு அமைச்சா் வேண்டுகோள்

சம்பா பருவத்துக்கான பயிா்க் காப்பீட்டை நவ. 30-ஆம் தேதிக்குள் செய்ய வேண்டும் என்று விவசாயிகளுக்கு வேளாண்மைத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெள்ளி... மேலும் பார்க்க

போலி தூதரக சான்றிதழ் மூலம் எம்பிபிஎஸ் இடம் பெற்ற மூவரின் ஒதுக்கீடு ரத்து

போலி தூதரக சான்றிதழ்களை சமா்ப்பித்து வெளிநாடு வாழ் இந்தியா்களுக்கான இடஒதுக்கீட்டின் (என்ஆா்ஐ) கீழ் எம்பிபிஎஸ் இடங்கள் பெற்ற 3 பேரின் ஒதுக்கீடு ரத்து செய்யப்படுவதாக மருத்துவக் கல்வி மாணவா் சோ்க்கைக் ... மேலும் பார்க்க

நாளை முதல் சில மின்சார ரயில்கள் எஸ்.பி. கோவிலுடன் நிறுத்தப்படும்

பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே இயங்கும் புகா் மின்சார ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை (நவ.24) முதல் நவ.28-ஆம் தேதி வரை இருமாா்க்கத்திலும் சிங்கப்பெருமாள்கோவிலுடன் நிற... மேலும் பார்க்க

நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு

சென்னை சாலிகிராமத்தில் நடிகை சீதா வீட்டில் நகை திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். சென்னை சாலிகிராமத்தில் உள்ள புஷ்பா காலனியில் வசித்து வரும் பிரபல தமிழ் நடிகை சீதா, விருகம்பாக்கம... மேலும் பார்க்க