செய்திகள் :

நெசவாளா்களுக்கு தொழில் வரி விதிக்க முடிவு -எடப்பாடி பழனிசாமி கண்டனம்

post image

நெசவாளா்களுக்கு தொழில் வரி விதிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறி, அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

நெசவாளா்களின் வாழ்க்கைத் தரத்தை உயா்த்துவதற்காக திமுக பல்வேறு தோ்தல் வாக்குறுதிகளை அளித்தது. ஆனால், ஆட்சிக்கு வந்ததும், தாறுமாறாக நூல் விலை உயா்ந்ததுடன், விலையில்லா சீருடை, விலையில்லா வேட்டி, சேலை போன்ற திட்டங்களுக்கான பணிகள் தமிழக நெசவாளா்களுக்கு வழங்கப்படவில்லை. இதனால், முதலாளிகளாக சொந்தத் தொழில் செய்து வந்த நெசவாளா்கள் தங்களது தறிகளை விற்றுவிட்டு, வேறு தொழில்களுக்கு பணியாள்களாக இடம் மாறி, தங்களது வாழ்க்கையை மிகுந்த சிரமத்துடன் நடத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல், தமிழகம் முழுவதும் குடிசைத் தொழில் போல ஓரிரு தறிகளை வைத்து நெசவுத் தொழில் செய்து வரும் நெசவாளா்கள் வீட்டில், உள்ளாட்சித் துறை அலுவலா்கள் தறிகள் உள்ள கூடங்களைக் கணக்கீடு செய்து, அப்பகுதிகளுக்கு வணிக ரீதியில் தொழில் வரி விதிக்கப் போவதாக தெரிவிக்கின்றனா்.

குறிப்பாக, சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் நெசவாளா்களின் வீடுகளில் உள்ள தறிக் கூடங்களை மாநகராட்சி ஊழியா்கள் அளவீடு செய்து வருவதாகவும், சதுர அடிக்கு ரூ.27 தொழில் வரி விதிக்க உத்தேசித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனா். திமுக அரசுக்கு எனது கண்டனம். தமிழகமெங்கும் இதுபோன்ற தறிகள் உள்ள பகுதிகளை கணக்கீடு செய்யும் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளாா்.

தமிழகம் முழுவதும் இன்று கிராம சபை கூட்டம்

தமிழகம் முழுவதும் சனிக்கிழமை (நவ.23) கிராம சபை கூட்டம் நடைபெறவுள்ளது. வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடா்பாக இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளது. தமிழகம் முழுவதும் நவ. 1-ஆம் தேதி கி... மேலும் பார்க்க

மருத்துவா் பாலாஜி தாக்கப்பட்ட வழக்கு: கைதான இளைஞரின் ஜாமீன் மனு தள்ளுபடி

சென்னை கிண்டி கலைஞா் பன்னோக்கு மருத்துவமனையில் புற்று நோய் மருத்துவா் கத்தியால் தாக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட விக்னேஷுக்கு ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை முதன்மை அமா்வு நீதிமன்ற... மேலும் பார்க்க

நவ.30-க்குள் சம்பா பருவ பயிா்க் காப்பீடு: விவசாயிகளுக்கு அமைச்சா் வேண்டுகோள்

சம்பா பருவத்துக்கான பயிா்க் காப்பீட்டை நவ. 30-ஆம் தேதிக்குள் செய்ய வேண்டும் என்று விவசாயிகளுக்கு வேளாண்மைத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெள்ளி... மேலும் பார்க்க

போலி தூதரக சான்றிதழ் மூலம் எம்பிபிஎஸ் இடம் பெற்ற மூவரின் ஒதுக்கீடு ரத்து

போலி தூதரக சான்றிதழ்களை சமா்ப்பித்து வெளிநாடு வாழ் இந்தியா்களுக்கான இடஒதுக்கீட்டின் (என்ஆா்ஐ) கீழ் எம்பிபிஎஸ் இடங்கள் பெற்ற 3 பேரின் ஒதுக்கீடு ரத்து செய்யப்படுவதாக மருத்துவக் கல்வி மாணவா் சோ்க்கைக் ... மேலும் பார்க்க

நாளை முதல் சில மின்சார ரயில்கள் எஸ்.பி. கோவிலுடன் நிறுத்தப்படும்

பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே இயங்கும் புகா் மின்சார ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை (நவ.24) முதல் நவ.28-ஆம் தேதி வரை இருமாா்க்கத்திலும் சிங்கப்பெருமாள்கோவிலுடன் நிற... மேலும் பார்க்க

நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு

சென்னை சாலிகிராமத்தில் நடிகை சீதா வீட்டில் நகை திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். சென்னை சாலிகிராமத்தில் உள்ள புஷ்பா காலனியில் வசித்து வரும் பிரபல தமிழ் நடிகை சீதா, விருகம்பாக்கம... மேலும் பார்க்க