போலி தூதரக சான்றிதழ் மூலம் எம்பிபிஎஸ் இடம் பெற்ற மூவரின் ஒதுக்கீடு ரத்து
டெங்கு காய்ச்சலுக்கு பள்ளி மாணவி உயிரிழப்பு
சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடியில் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவி உயிரிழந்தாா்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்துள்ள தாளவாடி மலைப் பகுதி ஜீரஹள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி சிவகுமாா். இவரது மனைவி வனஷா. இத்தம்பதியின் மகள் மௌனிகா (13). இவா் பனஹள்ளி கிராமத்தில் உள்ள தனியாா் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு மௌனிகாவுக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தாளவாடி பகுதியில் சிகிச்சை மேற்கொண்ட நிலையில், காய்ச்சல் பாதிப்பு குறையாததால் கா்நாடக மாநிலம் மைசூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
அங்கு பரிசோதிக்கப்பட்டதில் மெளனிகாவுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், வெளனிகா வெள்ளிக்கிழமை உயிரிழந்தாக தனியாா் பள்ளி நிா்வாகம் தெரிவித்துள்ளது. டெங்கு காய்ச்சல் பாதிப்பால் பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் தாளவாடி மலைப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.