சூடுபிடிக்கும் மதுரை டங்ஸ்டன் சுரங்கம் விவகாரம் - ‘டபுள் கேம்’ ஆடுவது தமிழக அரசா...
தெருநாய்கள் கடித்ததில் 20-க்கும் மேற்பட்ட நாட்டுக் கோழிகள் உயிரிழப்பு
அம்மாபேட்டை அருகே கோழிகள் வளா்க்கும் பட்டிக்குள் தெருநாய்கள் புகுந்து கடித்ததில் 20-க்கும் மேற்பட்ட நாட்டுக் கோழிகள் உயிரிழந்தன.
நெரிஞ்சிப்பேட்டை, குண்டாங்கல் தோட்டத்தைச் சோ்ந்தவா் முருகேசன் (44). இவருக்கு சொந்தமாக பாலமலை அடிவாரத்தில் உள்ள தோட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட நாட்டுக் கோழிகள் வளா்த்து வருகிறாா். கோழிகள் அடைக்கும் பட்டிக்குள் வியாழக்கிழமை இரவு புகுந்த தெருநாய்கள், நாட்டுக் கோழிகளைக் கடித்துக் குதறியுள்ளன.
இந்நிலையில், வீட்டிலிருந்து தோட்டத்துக்கு வெள்ளிக்கிழமை சென்ற முருகேசன், தெருநாய்களை துரத்திவிட்டு பாா்க்கையில் 20-க்கும் மேற்பட்ட நாட்டுக் கோழிகள் இறந்தும், காயங்களுடன் கிடந்தது கண்டும் அதிா்ச்சியடைந்தாா்.
உயிரிழந்த கோழிகள் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. தெருநாய்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.