செய்திகள் :

மகாராஷ்டிரா: முதல்வர் பதவிக்கு இப்போதே போட்டி... தேர்தல் முடிவு வருவதற்குள் மோதும் கூட்டணிகள்..!

post image

முதல்வர் பதவிக்கு இப்போதே கடும் போட்டி...

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை காலையில் எண்ணப்படுகிறது. இத்தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பே இரண்டு அணியிலும் முதல்வர் பதவிக்கு இப்போதே போட்டி ஏற்பட்டு இருக்கிறது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் பா.ஜ.க தலைமையிலான மஹாயுதி கூட்டணிக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில கருத்துக்கணிப்புகள் எதிர்க்கட்சிகளின் மகாவிகாஷ் அகாடிக்கு சாதகமாக வெளிவந்துள்ளன. இதனால் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் ஏற்பட்டுள்ளது. இதனால் இரண்டு கூட்டணியிலும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

தேவேந்திர பட்னாவிஸ்

காங்கிரஸ் தலைமையில் புதிய அரசு - நானா பட்டோலே

மாநில காங்கிரஸ் தலைவர் நானா பட்டோலே தங்களது கட்சி தலைமையில் புதிய அரசு அமையும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள சிவசேனா(உத்தவ்) எம்.பி. சஞ்சய் நிரூபம், தேர்தல் வெற்றிக்கு பிறகு யார் முதல்வர் என்பதை மகாவிகாஷ் கூட்டத்தில் முடிவு செய்யப்படும். மகாவிகாஷ் அகாடிக்கு 166 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. நானா பட்டோலே காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளர் என்றால் அதனை அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே அறிவிக்கவேண்டும்''என்று தெரிவித்துள்ளார்.

ஏக்நாத் ஷிண்டே முதல்வராவார் - சிவசேனா(ஷிண்டே)

ஆளும் மஹாயுதி கூட்டணியிலும் முதல்வர் பதவிக்கு போட்டி ஏற்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக சிவசேனா(ஷிண்டே) செய்தித்தொடர்பாளர் சஞ்சய் ஷிர்சாத் அளித்த பேட்டியில்,''முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயை முன்னிறுத்தித்தான் தேர்தலை சந்தித்தோம். எனவே ஏக்நாத் ஷிண்டே முதல்வராக வேண்டும் என்று கருதியே மக்கள் வாக்களித்துள்ளனர்.எனவே ஏக்நாத் ஷிண்டே முதல்வராவதுதான் சரியாக இருக்கும் என்று கருதுகிறேன்'' என்றார்.

தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராவார் - பா.ஜ.க

இந்நிலையில், துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ்தான் முதல்வராவார் என்று பா.ஜ.க தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் தலைவர்களில் ஒருவரான பிரவின் தாரேகர் கூறுகையில், பா.ஜ.கவில் இருந்து யாராவது முதல்வரானால் அது தேவேந்திர பட்னாவிஸாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். மஹாயுதிதான் அடுத்த ஆட்சியமைக்கும். மகாவிகாஷ் அகாடியில் உள்கட்சி மோதல் இருக்கிறது. எனவே மக்கள் தெளிவான முடிவை கொடுத்துள்ளனர். மஹாயுதி கூட்டணியைச் சேர்ந்தவர்தான் முதல்வாராவார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நானா பட்டோலே முதல்வராவது கனவில்தான் நடக்கும். தேர்தலில் வெற்றி பெறும் சுயேச்சைகள் கூட மஹாயுதி கூட்டணிக்கு ஆதரவு கொடுப்பார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

நானா பட்டோலே

கிங்மேக்கராக இருப்போம் - தேசியவாத காங்கிரஸ் (அஜித்பவார்)

பா.ஜ.க கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேசியவாத காங்கிரஸ் (அஜித்பவார்) கட்சி நிர்வாகி அமோல் இது குறித்து கூறுகையில், எந்தமாதிரியான தேர்தல் முடிவு வந்தாலும் எங்களது கட்சி கிங்மேக்கராக இருக்கும். முதல்வர் பதவி தொடர்பாக மூன்று கட்சிகளும் சேர்ந்து முடிவு செய்வோம்''என்றார்.

தேவைப்பட்டால் எம்.எல்.ஏ.க்களை...

மாநில பா.ஜ.க தலைவர் சந்திரசேகர் பவன்குலே இது குறித்து அளித்த பேட்டியில், "பா.ஜ.க தொண்டர்கள் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக வேண்டும் என்று விரும்புகின்றனர்" என்று தெரிவித்தார்.

சிவசேனா(ஷிண்டே) அமைச்சர் தீபக் கேசர்கர் இது தொடர்பாக அளித்த பேட்டியில், "தேவைப்பட்டால் சுயேச்சைகளின் ஆதரவோடு ஆட்சியமைப்போம்" என்று தெரிவித்துள்ளார்.

"தேர்தல் முடிந்தவுடன் தேவைப்பட்டால் எம்.எல்.ஏ.க்களை வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்யவும் தயாராக இருக்கிறோம்" என்று காங்கிரஸ் மாநில தலைவர் நானா பட்டோலே தெரிவித்துள்ளார்.

உத்தவ் தாக்கரே

பா.ஜ.க தீவிரம்..

தேர்தலில் எந்த கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க முயற்சி நடக்க வாய்ப்பு இருக்கிறது. அதனையும் எதிர்கொள்ள மகாவிகாஷ் அகாடி தயாராக இருப்பதை அக்கட்சி தலைவர்களே ஒப்புக்கொண்டுள்ளனர்.

எப்படியும் இம்முறை முதல்வர் பதவியை கைப்பற்றிவிட வேண்டும் என்பதில் பா.ஜ.க தீவிரமாக இருக்கிறது. எனவே மஹாயுதி கூட்டணியிலும் முதல்வர் பதவிக்கு போட்டி கடுமையாக இருக்கும் என்று அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/ParthibanKanavuAudioBook

``உடற்பயிற்சி செய்தாலும், நீண்ட நேரம் உட்கார்ந்தால் இதய நோய் வரலாம்'' - ஆய்வில் தகவல்!

நீண்ட நேரம் அமர்ந்திருப்பவர்கள் உடற்பயிற்சி செய்தாலும் இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என சமீபத்திய ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.மருத்துவர் எஸிம் அஜுபோ (Ezim Ajufo) பாஸ்டனைச் சேர்ந்த இதவியல் நிபு... மேலும் பார்க்க

அஜித்பவார் - சரத்பவார் மோதிய தொகுதிகளில் 70% வாக்குப்பதிவு... சர்க்கரை சாம்ராஜ்யம் யாருக்கு?

எப்போதும் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு.. மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் இம்முறை எப்போதும் இல்லாத அளவுக்கு கடுமையான போட்டி நிலவியது. இத்தேர்தலில் சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தலா இரண்... மேலும் பார்க்க

``பணி ஓய்வுபெற்றும் பல ஆண்டாக தொழிற்சங்க பொறுப்பு..!'' - மதுரை தொ.மு.ச-வுக்குள் கசமுசா..!

"ரிடையர்ட் ஆகி பல வருசமானாலும் யூனியன் பொறுப்பை கெட்டியாக பிடித்துக்கொண்டு அடுத்தவருக்கு வழிவிடாமல் அட்டகாசம் செய்கிறார்கள்" என்றுகொந்தளிக்கிறார்கள் அரசு போக்குவரத்துக் கழக திமுக தொழிற்சங்கத்தினர்.தமி... மேலும் பார்க்க

Doctor Vikatan: 20 வருடங்களாக நீரிழிவு, சமீபத்தில் மாரடைப்பு... மாற்று மருத்துவம் உதவுமா?

Doctor Vikatan: என் அம்மாவுக்கு 56 வயது. அவர் கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கும் மேலாக நீரிழிவு நோயாளியாகஇருக்கிறார். மூன்று வருடங்களுக்கு முன்பு அவருக்கு ஹார்ட் அட்டாக் வந்தது. மருத்துவமனையில் அட்மிட் செ... மேலும் பார்க்க

``திமுகவிற்கு ராசி இல்லை, அதனால்...'' - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு

திருவள்ளூர் மாவட்டத்தில் அந்தப் பகுதியின் மத்திய கள‌ ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது. அந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டிருந்தார்.அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் , "தமிழ... மேலும் பார்க்க

America: ட்ரம்பிடம் பேசிய சுந்தர் பிச்சை; இணைப்பில் இருந்த எலான் மஸ்க் - தொடரும் நட்பு!

நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், டொனால்ட் ட்ரம்ப் இரண்டாவது முறை அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். அவரின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தவர்களில் மிக முக்கியமானவர் டெஸ்லா நிறுவனர் எ... மேலும் பார்க்க