செய்திகள் :

Aus vs Ind: `அஸ்வின், ஜடேஜாவை உட்காரவைத்து நிதிஷ் ரெட்டியை இறக்குவதா?' - கவாஸ்கர் கேள்வி

post image

பார்டர் கவாஸ்கர் டிராபி (BGT) 2024-25 தொடர் ஆஸ்திரேலியாவில் இன்று தொடங்கியிருக்கிறது. பெர்த் மைதானத்தில் இன்று தொடங்கிய ஆஸ்திரேலியாவுக்கெதிரான முதல் டெஸ்டில் இந்திய அணியின் சீனியர் ஆல்ரவுண்டர் அஷ்வின் மற்றும் ஜடேஜா பென்ச்சில் அமரவைக்கப்பட்டனர். இந்த முடிவு ரசிகர்களுக்குமே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

அஸ்வின், ஜடேஜா

அதேசமயம், வாஷிங்டன் சுந்தர் மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோர் பிளேயிங் லெவனில் ஆல்ரவுண்டர் ஸ்லாட்டில் களமிறக்கப்பட்டனர். மேலும், இந்த டெஸ்ட் மூலம் வேகப்பந்துவீச்சாளராக முதன்முறையாக சர்வதேச கிரிக்கெட்டில் ஹர்ஷித் ராணா அறிமுகமாகியிருக்கிறார். இந்த நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் முதன்முறையாக அறிமுகமாகியிருக்கும் நிதிஷ் குமார் ரெட்டியின் தேர்வு குறித்து முன்னாள் இந்திய வீரர் கவாஸ்கர் கேள்வியெழுப்பியிருக்கிறார்.

ஆட்டத்தின் வர்ணனையின்போது நேரலையில் பேசிய கவாஸ்கர், ``அஷ்வின் மற்றும் ஜடேஜா விளையாடாதது ஆச்சர்யமாக இருக்கிறது. டெஸ்ட் போட்டிகளில் அவர்கள் இருவரும் 900 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கின்றனர். மேலும், இவர்கள் இந்தியா அல்லது துணைக் கண்டத்தின் சூழலில் மட்டும் ஆடும் ஆடக்கூடிய பந்துவீச்சாளர்கள் அல்ல. மிகவும் தந்திரமாகப் பந்துவீசக்கூடியவர்கள், அனுபவம் வாய்ந்தவர்கள். அவர்களால் விக்கெட் எடுக்க முடியவில்லையென்றால், தந்திரமாகப் பந்துவீசி ரன்களைக் கட்டுப்படுத்த முடியும்.

சுனில் கவாஸ்கர்

ஆஸ்திரேலியாவில் பெரிய பவுண்டரி லைன்கள், எனவே இவர்களுடன் செல்வீர்கள் என்று நினைத்தேன். ஆனால், புதிய நிர்வாகம் புதிய சிந்தனையாக நிதிஷ் குமார் ரெட்டியுடன் சென்றிருக்கிறது. இதில் இந்தத் தவறும் இல்லை. ஆனால், டெஸ்ட் போட்டிக்கு அவர் தயாராக இருக்கிறாரா?" என்று கேள்வியெழுப்பினார்.

ஆஸ்திரேலியாவுக்கெதிரான முதல் டெஸ்டில் அஸ்வின், ஜடேஜா இருவருமே இடம்பெறாதது குறித்து உங்கள் கருத்தை கமெண்டில் பதிவிடுங்கள்!

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/MaperumSabaithanil

Pant: `IPL ஏலத்தில் எந்த அணிக்குச் செல்லப்போகிறீர்கள்?' - நாதன் லயன் கேள்வி... பண்ட் பதிலென்ன?

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் கவாஸ்கர் தொடர் பெர்த் மைதானத்தில் இன்று தொடங்கியது. நாளை மறுநாள் சவுதி அரேபியாவில் ஐ.பி.எல் மெகா ஏலம் (நவம்பர் 24, 25) தொடங்கவிருக்கிறது. இதில், டெல்லி அணியி... மேலும் பார்க்க

Dhoni: அன்று தோனி சிந்திய கண்ணீர்... 2014 பார்டர் கவாஸ்கர் தொடரில் என்ன நடந்தது தெரியுமா?

கிரிக்கெட் ரசிகர்கள் அதிகமாக எதிர்பார்த்து காத்திருந்த பார்டர் கவாஸ்கர் தொடர் இன்று தொடங்கியிருக்கிறது.காலச்சக்கரத்தில் இந்திய கிரிக்கெட்டின் பல முக்கியமான தருணங்களை பார்டர் கவாஸ்கர் தொடர் தாங்கி நிற்... மேலும் பார்க்க

IPL: 3 ஆண்டுகளுக்கான ஐபிஎல் அட்டவணையை வெளியிட்ட பிசிசிஐ - வரும் 18-வது ஐபில் தொடர் எப்போது தெரியுமா?

அடுத்த 3 சீசன்களுக்கான அட்டவணையை வெளியிட்டிருக்கிறது பிசிசிஐ.இந்திய அணி தற்போது பார்டர் கவாஸ்கர் தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. இந்நிலையில், ஐபிஎல் தொடருக்கான அட்டவணையை பிசிசிஐ வ... மேலும் பார்க்க

BGT: `IPL `டு' பார்டர் கவாஸ்கர்' - ஹர்ஷித் ராணா, நிதிஷ் ரெட்டி இந்திய அணியில் இடம் பிடித்தது எப்படி?

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடர் இன்று தொடங்கியிருக்கிறது. கடந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் கடந்த ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளில்... மேலும் பார்க்க

Live Aus vs Ind: ஆஸ்திரேலியாவில் ஹாட்ரிக் அடிக்குமா இந்தியா? BGT தொடரின் முதல் டெஸ்ட் இன்று | முழு விவரம் இங்கே..!

பார்டர்- கவாஸ்கர் தொடர் இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்தது. இதையடுத்து இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்று... மேலும் பார்க்க

WTC Final: டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு செல்ல இந்தியாவுக்கு என்னென்ன வழி இருக்கிறது? |முழு விவரம்

பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறது. நாளை (நவம்பர் 22 முதல் ஜனவரி 7 வரை) தொடங்கும் ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடர், ட... மேலும் பார்க்க