செய்திகள் :

WTC Final: டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு செல்ல இந்தியாவுக்கு என்னென்ன வழி இருக்கிறது? |முழு விவரம்

post image

பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறது. நாளை (நவம்பர் 22 முதல் ஜனவரி 7 வரை) தொடங்கும் ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடர், டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-25 ஃபைனலுக்கு இந்திய அணி செல்வதற்கு மிக முக்கியமான தொடர். உண்மையில் இந்தியா நியூசிலாந்திடம் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுமையாக இழப்பதற்கு முன்பு வரை, எளிதாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்குச் செல்லும் சூழல்தான் இருந்தது.

பார்டர் கவாஸ்கர் டிராபி

ஆனால், அந்தத் தோல்விக்குப் பிறகு, டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருந்த இந்திய அணி, அந்த இடத்தை இரண்டாம் இடத்திலிருந்த ஆஸ்திரேலியாவுக்குத் தாரைவார்த்தது. அதோடு, பார்டர் கவாஸ்கர் தொடரை 4 - 0 அல்லது 5 - 0 என்ற கணக்கில் வென்றால் மட்டுமே எளிதாக ஃபைனலுக்குச் செல்லலாம் என்ற இக்கட்டான சூழலையும் சொந்த செலவில் உருவாக்கிக் கொண்டது. ஒருவேளை, இந்தத் தொடரை மேலே குறிப்பிட்டுள்ளபடி இந்தியாவால் வெல்ல முடியவில்லையென்றால், கையில் நோட்டு பேனாவோடு மற்ற அணிகளின் வெற்றி, தோல்வியைக் கணக்கிட்டு, பைனலுக்குச் செல்ல ஏதாவது வழி இருக்கிறதா என்று கணக்குப் போட வேண்டும். அவை என்னவென்பதை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்...

* 4 (இ) - 1 (ஆஸி)

இந்தத் தொடரில் இந்திய அணி ஒரு போட்டியில் தோற்றாலே மற்ற அணிகளின் வெற்றி தோல்விகளைப் பொறுத்தே டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்குச் செல்ல முடியும். அதில், இந்திய அணி 4 போட்டிகளில் வென்று ஒரு போட்டியில் தோல்வியடையும்பட்சத்தில், இங்கிலாந்து நியூசிலாந்துக்கெதிரான 3 டெஸ்ட் போட்டிகளில் ஒன்றில் டிரா செய்தாலோ அல்லது தென்னாப்பிரிக்காவுக்கெதிராக ஒரு போட்டியில் இலங்கையோ, பாகிஸ்தானோ டிரா செய்தாலோ மட்டும்தான், ஃபைனலுக்குச் செல்ல முடியும்

இந்திய அணி - கம்பீர், ரோஹித்

* 3 (இ) - 2 (ஆஸி)

இந்தியா 3 - 2 என்று இந்தத் தொடரை வெல்லும்பட்சத்தில், இந்திய அணி ஃபைனலுக்குச் செல்வதற்கு, நியூசிலாந்தை ஒரு போட்டியில் இங்கிலாந்தும், ஆஸ்திரேலியாவைக் குறைந்தது ஒரு போட்டியில் இலங்கையும் வீழ்த்துவதோடு, இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான தலா இரண்டு போட்டியில் இரண்டில் தென்னாப்பிரிக்கா தோற்க வேண்டும்.

* 2 (இ) - 2 (ஆஸி)

ஒருவேளை இந்தத் தொடர் 2 - 2 என சமனில் முடிந்தால், இங்கிலாந்துக்கு எதிராக ஒரு போட்டியில் நியூசிலாந்தும், தென்னாப்பிரிக்காவுக்கெதிராக ஒரு போட்டியில் இலங்கையும், இலங்கைக்கு எதிரான இரண்டு போட்டியில் ஆஸ்திரேலியாவும் தோற்றால், இந்திய அணி ஃபைனலுக்குச் செல்லலாம்.

விராட் கோலி, கே.எல்.ராகுல்

* 2 (இ) - 1 (ஆஸி)

மேலே குறிப்பிட்ட மூன்றில் எதுவும் நடக்காமல், 2 - 1 என இந்திய அணி தொடரைக் கைப்பற்றினால் நிலைமை இன்னும் மோசமாகிவிடும். அதாவது, இங்கிலாந்துக்கெதிரான தொடரில் நியூசிலாந்து ஒரு போட்டியில் வெற்றிபெற்று, ஒரு போட்டியை டிரா செய்ய வேண்டும். மேலும், இலங்கை தென்னாப்பிரிக்காவிடம் இரண்டு போட்டியில் தோற்று, ஆஸ்திரேலியாவிடம் இரண்டு போட்டியில் வெற்றிபெற வேண்டும். இது நடந்தால்தான் இந்திய அணியால் ஃபைனலுக்குச் செல்ல முடியும்.

* இவையெதுவுமே நடக்காமல், இந்தத் தொடரில் ஒரேயொரு டெஸ்டில் மட்டுமே இந்திய அணி வெற்றிபெறுகிறது எனில், யாருடைய வெற்றி, தோல்வியையும் கணக்கு செய்யாமல் நேராக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-27க்குத் தயாராகலாம்.

இந்திய அணி

மறுபக்கம், இலங்கை அணி தென்னாப்பிரிக்காவில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் (நவம்பர் 27 - டிசம்பர் 9), இங்கிலாந்து அணி நியூசிலாந்தில் 3 போட்டிகள் டெஸ்ட் தொடரிலும் (நவம்பர் 28 - டிசம்பர் 18), பாகிஸ்தான் அணி தென்னாப்பிரிக்காவில் 2 போட்டிகள் டெஸ்ட் தொடரிலும் (டிசம்பர் 26 - ஜனவரி 7), ஆஸ்திரேலிய அணி இலங்கையில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் (ஜனவரி 29 - பிப்ரவரி 10) விளையாடவிருக்கிறது. இந்தத் தொடர்களுக்குப் பிறகு நடைபெறும் டெஸ்ட் போட்டிகள், டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-27 புள்ளிப்பட்டியலுக்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

Yashasvi Jaiswal: `ரெண்டே சிக்ஸ்ல முடிக்றேன்!' - மெக்கல்லமின் உலக சாதனையை முறியடிக்கும் ஜெய்ஸ்வால்

இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்காலமாகக் கணிக்கப்படும் இளம் வீரர்களில் முக்கியமானவர் 22 வயதான யஷஸ்வி ஜெய்ஸ்வால். ஐ.பி.எல்லில் கடந்த 2020-ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அறிமுகமாகி அடுத்தடுத்த சீசன்களில் த... மேலும் பார்க்க

BGT 2024-25: ``இந்தியா சிறந்த அணி; ஆனாலும் நாங்கள்..!'' - சவாலுக்குத் தயாரான பேட் கம்மின்ஸ்

பார்டர் கவாஸ்கர் டிராபி தொடர் ஆஸ்திரேலியாவில் நாளை தொடங்குகிறது. இதில், நியூசிலாந்துடனான வரலாற்றுத் தோல்வியிலிருந்து மீண்டெழவும், தொடர்ச்சியாக 5-வது முறையாக பார்டர் கவாஸ்கர் டிராபியை வென்று ஆஸ்திரேலிய... மேலும் பார்க்க

Bumrah: `நான் மித வேகபந்துவீச்சாளரா?!' - ஆஸியில் பத்திரிகையாளர் கேள்விக்கு கேப்டன் பும்ரா பதிலடி

இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபி தொடர் நாளை ஆஸ்திரேலியாவில் தொடங்குகிறது. முதல் முறையாக ஐந்து போட்டிகள் கொண்டதாக இது நடைபெறவிருக்கிறது. கடைசியாக, மைக்கேல் கிளார்க் தலைமையிலா... மேலும் பார்க்க

BGT 2024-25: ஆஸியில் ஒலிக்குமா `கிங் கோலி' கோஷம்; காத்திருக்கும் விமர்சனங்கள்... தகர்ப்பாரா கோலி?!

நவீன கிரிக்கெட் யுகத்தில் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் அணுகுமுறையே மாற்றியமைத்தவர், `கிங் கோலி', `ரன் மெஷின்' என ரசிகர்களால் கொண்டாடப்படும் விராட் கோலி தான் என்பதை அழுத்தமாகவே கூறலாம். கோலி கேப்ட... மேலும் பார்க்க

Champions Trophy: ``இந்தியா பாகிஸ்தானில் விளையாடுவது பாஜக அரசின் கையில் இருக்கிறது" - அக்தர்

பாதுகாப்பு காரணங்களைக் குறிப்பிட்டு 2008 முதல் பாகிஸ்தானுக்குச் சென்று விளையாடுவதைத் தவிர்த்துவரும் வரும் இந்திய கிரிக்கெட் அணி, அடுத்தாண்டு பிப்ரவரியில் பாகிஸ்தானில் நடைபெறவிருக்கும் சாம்பியன்ஸ் டிரா... மேலும் பார்க்க

Aus vs Ind: ஆஸ்திரேலியாவில் ஹாட்ரிக் அடிக்குமா இந்தியா? பரபரக்கும் BGT தொடரின் முழு விவரம் இங்கே..!

பார்டர்- கவாஸ்கர் தொடர் இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்தது. இதையடுத்து இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்று... மேலும் பார்க்க