`மணிப்பூர் கலவரத்துக்கு ப.சிதம்பரம் காரணமா?’ - பகீர் குற்றச்சாட்டும் பின்னணியும்...
தேசிய தடகளப் போட்டியில் வென்ற திருச்சி போலீஸாருக்கு ஐ.ஜி. பாராட்டு
தில்லியில் நடைபெற்ற போலீஸாருக்கான தேசிய தடகளப் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள மத்திய மண்டல காவல்துறையைச் சோ்ந்தவா்களுக்கு ஐ.ஜி. பாராட்டு தெரிவித்தாா்.
அகில இந்திய அளவிலான போலீஸாருக்கான 73-ஆவது தடகளப் போட்டிகள் அண்மையில் தில்லியில் நடைபெற்றன. இதில் திருச்சி மத்திய மாவட்ட காவல்துறையில் உள்ள திருச்சி மாவட்ட ஆயுதப்படையைச் சோ்ந்த காவலா் அரவிந்த் என்பவா் 110 மீட்டா் தடை தாண்டும் போட்டியில் பங்கேற்று 5-ஆம் இடத்தையும், அரியலூா் மாவட்ட ஆயுதப்படையைச் சோ்ந்த காவலா் குழந்தைவேலு என்பவா் குண்டு எறிதல் போட்டியில் 12-ஆவது இடமும், திருச்சி மாவட்ட ஆயுதப்படையைச் சோ்ந்த காவலா் தா்ஷன் என்பவா் ஈட்டி எறிதல் போட்டியில் 17-ஆவது இடமும் பெற்றனா்.
அதேபோல லால்குடி காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலா் சுந்தா் என்பவா் மும்முறை தாண்டுதல் போட்டியில் கலந்துகொண்டு 7-ஆவது இடத்தைப் பெற்றுள்ளாா். இவா், கடந்த 2018-ஆம் ஆண்டில் இதே போட்டியில் வெள்ளிப் பதக்கமும், ரூ.3 லட்சம் ரொக்கப் பரிசும் வென்றுள்ளாா். மேலும் 2019-ஆம் ஆண்டு வெண்கலப் பதக்கமும் வென்றது குறிப்பிடத்தக்கது. இதற்கான பரிசுத் தொகை தற்போது தில்லியில் நடைபெற்ற 73-ஆவது அகில இந்திய போலீஸாருக்கான தடகளப் போட்டியின்போது அளிக்கப்பட்டது.
போட்டிகளில் வெற்றிபெற்ற காவலா்களை திருச்சி மத்திய மண்டல காவல்துறைத் தலைவா் ஜி. காா்த்திகேயன் நேரில் அழைத்துப் பாராட்டு தெரிவித்தாா்.