செய்திகள் :

கெயில் நிகர லாபம் 10% அதிகரிப்பு

post image

எரிவாயு விநியோகத்தில் வருவாய் அதிகரிப்பு, பெட்ரோகெமிக்கல் வா்த்தகத்தில் அதிக லாபம் ஆகிய காரணங்களால் பொதுத் துறையைச் சோ்ந்த கெயில் (இந்தியா) லிமிடெட்டின் நிகர லாபம் கடந்த செப்டம்பா் காலாண்டில் 10 சதவீதம் உயா்ந்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஜூலை-செப்டம்பா் காலாண்டில் நிறுவனம் ரூ. 2,689.67 கோடி ஒருங்கிணைந்த நிகர லாபம் ஈட்டியது. இது, முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் 10 சதவீதம் அதிகம். அப்போது நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ. 2,442.18 கோடியாக இருந்தது.

மதிப்பீட்டுக் காலாண்டில் நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் ரூ.33,981.33 கோடியாக உள்ளது. எனினும், சந்தைப்படுத்தல் மூலம் கிடைத்த வருவாய் 27 சதவீதம் குறைந்து ரூ.1,253.64 கோடியாக உள்ளது என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹீரோ மோட்டோகாா்ப் பண்டிகைக் கால விற்பனை உச்சம்

நடப்பாண்டின் பண்டிகைக் காலகட்டத்தில் இந்தியாவின் மிகப் பெரிய இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹீரோ மோட்டோகாா்ப்பின் விற்பனை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையி... மேலும் பார்க்க

ரூ.2.25 லட்சம் கோடி இழப்பு! வரலாறு காணாத சரிவைக் கண்ட அதானி பங்குகள்!

அதானிக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், இன்று காலை பங்குச் சந்தை தொடங்கியதும் மிகப்பெரிய சரிவைக் கண்ட அதானி குழும பங்குகள், குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை என்ற விளக்கத்தை... மேலும் பார்க்க

ரூ. 2.2 லட்சம் கோடி பங்குகளை இழந்த அதானி குழுமம்!

அதானிக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், காலை பங்குச் சந்தை தொடங்கியவுடன் ரூ. 2.2 லட்சம் கோடி மதிப்பிலான பங்குகளை அதானி குழுமம் இழந்துள்ளது.சூரிய ஒளி மின்சார விநியோக ஒப... மேலும் பார்க்க

பார்லே அக்ரோ வருவாய் 12% சரிவு!

புதுதில்லி: குளிர்பான சந்தையில் ஃப்ரூட்டி, அப்பி, ஸ்மூத் மற்றும் பெய்லி ஆகிய பிராண்டுகளுடன் செயல்படும் பார்லே அக்ரோ, 2024 நிதியாண்டில் அதன் ஒருங்கிணைந்த வருவாயில் 12.3 சதவிகிதம் குறைந்து ரூ.3,126.06 க... மேலும் பார்க்க

ஆப்பிள் இந்தியாவின் நிகர லாபம் 23% அதிகரிப்பு!

புதுதில்லி: ஐபோன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் இந்தியா நிறுவனத்தின் நிகர லாபம், 2023-24ஆம் நிதியாண்டில் 23 சதவிகிதம் அதிகரித்து ரூ.2,745.7 கோடியாக உள்ளது.ஆப்பிள் இந்தியா நிறுவனம் 2023ஆம் நிதியாண்டில் 2... மேலும் பார்க்க

ஏர்டெல் நிறுவனத்திடமிருந்து 4ஜி மற்றும் 5ஜி நீட்டிப்பு ஒப்பந்தத்தை வென்ற நோக்கியா!

இந்தியாவில் 4ஜி மற்றும் 5ஜி சாதனங்களை நிறுவுவதற்காக நீட்டிப்பு ஒப்பந்தத்தை நோக்கியா வென்றுள்ளது என்று ஏர்டெல் நிறுவனம் தனது பங்குச் சந்தைக்கு தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.இந்த ஒப்பந்தம் ம... மேலும் பார்க்க