Inbox 2.0 : Eps 13 - `அந்த 1500 பேருக்கு நன்றி!' | Cinema Vikatan
ஆப்பிள் இந்தியாவின் நிகர லாபம் 23% அதிகரிப்பு!
புதுதில்லி: ஐபோன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் இந்தியா நிறுவனத்தின் நிகர லாபம், 2023-24ஆம் நிதியாண்டில் 23 சதவிகிதம் அதிகரித்து ரூ.2,745.7 கோடியாக உள்ளது.
ஆப்பிள் இந்தியா நிறுவனம் 2023ஆம் நிதியாண்டில் 2,229.6 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
2023ஆம் நிதியாண்டில் ரூ.49,321.8 கோடியாக இருந்த நிறுவனத்தின் மொத்த வருவாய் 2024ஆம் நிதியாண்டில் அது 36 சதவிகிதம் அதிகரித்து ரூ.67,121.6 கோடியாக உள்ளது.
இதையும் படிக்க: ஏர்டெல் நிறுவனத்திடமிருந்து 4ஜி மற்றும் 5ஜி நீட்டிப்பு ஒப்பந்தத்தை வென்ற நோக்கியா!
மொபைல் சாதனங்கள் மற்றும் மடிக்கணினிகள் உள்ளிட்ட ஆப்பிள் பிராண்ட் தயாரிப்புகள் மற்றும் மென்பொருளை வழங்கும் மற்றும் சந்தைப்படுத்தும் ஆப்பிள் இந்தியா பிரைவேட் லிமிடெட், 2023-24 ஆம் நிதியாண்டில் அதன் வருவாய் ரூ.67,122 கோடியாக அறிவித்துள்ளது. இது கடந்த நிதியாண்டை விட 36 சதவிகிதம் அதிகமாகும்.
நடப்பு நிதியாண்டில் நிறுவனத்தின் மொத்த செலவுகள் ரூ.63,397 கோடியாக உள்ளது.