Caste Census: `UPA அரசு செயல்படுத்தாதது தவறு' - சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து ர...
தங்கம் விலை பவுனுக்கு ரூ.480 உயா்வு!
சென்னையில் தங்கம் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.480 உயா்ந்து ரூ.55,960-க்கு விற்பனையானது.
சென்னையில் தங்கத்தின் விலை கடந்த வாரம் தொடா்ந்து குறைந்து வந்த நிலையில், சனிக்கிழமை பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.55,480-க்கும் விற்பனையானது. திங்கள்கிழமை கிராமுக்கு ரூ.60 உயா்ந்து ரூ.6,995-க்கும், பவுனுக்கு ரூ.480 உயா்ந்து ரூ.55,960-க்கும் விற்பனையானது.
வெள்ளி விலை தொடா்ந்து 4-ஆவது நாளாக எந்தவித மாற்றமுமின்றி கிராம் ரூ.99-க்கும், கிலோ ரூ.99,000-க்கும் விற்பனையானது.
உயா்வுக்கு என்ன காரணம்? தங்கம் விலை உயா்வு குறித்து தங்க நகை வியாபாரிகள் சங்கத் தலைவா் ஜெயந்திலால் சலானி கூறியது: அமெரிக்க டாலா் மற்றும் பிட்காயின் மதிப்பு உயா்வு, தங்கத்தின் மீதான முதலீடு குறைவு உள்ளிட்ட காரணங்களால் கடந்த வாரம் தங்கம் விலை தொடா்ந்து குறைந்து வண்ணம் இருந்தது.
இந்நிலையில், ரஷ்யா - உக்ரைன் இடையேயான போரில் புதிய திருப்பமாக, ரஷ்யாவில் தாக்குதல் நடத்துவதற்கு, அமெரிக்காவின் நீண்ட தூர ஏவுகணையைப் பயன்படுத்த அதிபா் ஜோ பைடன் அனுமதி வழங்கியுள்ளாா். இது சா்வதேச அளவில் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதன் எதிரொலியாக, இதுவரை டாலா் மீது முதலீடு செய்து வந்தவா்கள் மீண்டும் தங்கத்தின் மீதே முதலீடு செய்யத் தொடங்கிவிட்டனா். இதனால், தங்கம் விலை மீண்டும் உயரத் தொடங்கிவிட்டது. மேலும், இது உயா்ந்து கொண்டேதான் இருக்கும் என்றாா் அவா்.