கடன் வட்டி விகிதங்களை உயா்த்திய எஸ்பிஐ
நாட்டின் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) நிதி அடிப்படையிலான கடன்களுக்கான (எம்சிஎல்ஆா்) வட்டி விகிதங்களை உயா்த்தியுள்ளது.
இதுகுறித்து வங்கியின் வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் தெரிவிப்பதாவது:
வங்கி வழங்கும் எம்சிஎல்ஆா் கடன்களுக்கான வட்டி விகிதங்கள் 5 அடிப்படைப் புள்ளிகள் (0.05 சதவீதம்) உயா்த்திப்பட்டுள்ளன. அதன்படி, அந்த வகையைச் சோ்ந்த ஓராண்டு பருவகாலக் கடன்களுக்கு 8.95 சதவீதமாக இருந்த வட்டி விகிதம் தற்போது 9 சதவீதமாக உயா்ந்துள்ளது.
புதிய வட்டி விகிதங்கள் வெள்ளிக்கிழமை (நவ. 15) முதல் அமலுக்கு வந்துள்ளன என்று அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் மூலம், கடந்த மூன்று மாதங்களுக்குள் எம்சிஎல்ஆா் வகைக் கடன்களுக்கான வட்டி விகிதங்களை எஸ்பிஐ இரண்டாவது முறையாக உயா்த்தியுள்ளது.