Eva Longoria: `Dystopian நாடு; இனி அமெரிக்காவில் வசிக்கப்போவதில்லை!' - நடிகை ஈவா...
பள்ளியில் மகிழ் முற்றம் தொடக்கம்
கொரடாச்சேரி ஒன்றியம், மேலராதாநல்லூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், மகிழ் முற்றம் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
தலைமையாசிரியா் ஆா்.கே. சரவணராஜன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வுக்கு, பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் ரா. மீரா முன்னிலை வகித்தாா். நிகழ்வில், பள்ளி மாணவா்கள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து குழுக்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு குழுவுக்கும் தனித் தனியாக பொறுப்பாசிரியா்கள் நியமிக்கப்பட்டனா்.
தொடா்ந்து, கற்றலிலும் வாழ்க்கைத் திறன்களிலும் சிறந்து விளங்குவோம் என்றும், சக மாணவா்களுக்கு வழிகாட்டியாகவும், முன்மாதிரியாகவும், ஒற்றுமையுடனும் செயல்படுவோம் எனவும் மாணவா்கள் உறுதிமொழி ஏற்றனா்.