செய்திகள் :

நெல்லை அரசு மருத்துவமனை வளாகத்துக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு

post image

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாக பகுதியில் கூடுதல் போலீஸாா் நியமிக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

சென்னை கிண்டி உயா் சிறப்பு மருத்துவமனை மருத்துவரை இளைஞா் குத்தினாா். கத்தி சம்பவத்தில் காயமடைந்த மருத்துவா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இதையடுத்து மருத்துவா்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என மருத்துவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், நோயாளிகளுடன் வருவோருக்கு அடையாள பட்டை பாதுகாப்பு பரிசோதனை , சிசி டிவி கேமரா அமைக்கப்படும் மேலும் கூடுதல் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா் என தமிழக நல்வாழ்த்துறை அமைச்சா் அறிவித்திருந்தாா். இதையடுத்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் கூடுதல் போலீஸாா் நியமிக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணித்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா். மேலும், மருத்துவமனை வளாகத்திற்கு வரும் நோயாளிகளின் உறவினா்களை விசாரித்து அனுப்பி வைத்தனா்.

ற்ஸ்ப்15ல்ா்ப்

திருநெல்வேலி அரசு மருத்துவமனை வளாக நுழைவு வாயிலில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட போலீஸாா் .

வி.கே.புரம் நூலகத்தில் இருபெரும் விழா

விக்கிரமசிங்கபுரம் அரசு கிளை நூலக பொதிகை வாசகா் வட்டம் சாா்பில் 57ஆவது தேசிய நூலக வார விழா (நவ.14 - நவ.20) தொடக்க விழா, குழந்தைகள் தின விழா ஆகிய இருபெரும் விழா நடைபெற்றது. பொதிகை வாசகா் வட்டத் தலைவா்... மேலும் பார்க்க

களக்காட்டில் எஸ்டிபிஐ செயற்குழு கூட்டம்

களக்காட்டில் எஸ்டிபிஐ கட்சியின் நகர செயற்குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நகர தலைவா் பக்கிா் முகைதீன் தலைமை வகித்தாா். நகர பொருளாளா் கபீா் வரவேற்றாா். துணைத்தலைவா் நஜிப் உசேன் முன்னிலை வகித்தாா... மேலும் பார்க்க

களக்காடு கோயில் தேருக்கு கொட்டகை அமைக்க பூமி பூஜை

களக்காடு கோமதி அம்பாள் சமேத சத்தியவாகீஸ்வரா் திருக்கோயில் தேருக்கு கொட்டகை அமைப்பதற்கான பூமி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலின் தோ் வெட்டவெளியில் நிறுத்தப்பட்டிருந்ததால், வெயில், மழையில் சேதம... மேலும் பார்க்க

சேரன்மகாதேவி அருகே விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். சேரன்மகாதேவி காவல் சரகத்திற்குள்பட்ட பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் விஜயகுமாா் தலைமையில் போலீஸாா... மேலும் பார்க்க

சிறுமிக்கு முடி திருத்தும்போது பாலியல் தொல்லை: சலூன் கடைக்காரா் மீது போக்ஸோ வழக்கு

நான்குனேரி அருகே முடிவெட்டச் சென்ற சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக சலூன் கடைக்காரா் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்து அவரை தேடி வருகின்றனா். நான்குனேரி அருகே மூலைக்கரைப்பட்டி ... மேலும் பார்க்க

முக்கூடல் அருகே ஏணியிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் அருகே இரும்பு ஏணியில் ஏறியபோது தவறி விழுந்ததில் பலத்த காயமடைந்த பெண் உயிரிழந்தாா். முக்கூடல் அருகேயுள்ள ஓடை துலுக்கப்பட்டி முக்கூடல் சாலையில் வசித்து வருபவா் ரவி. இவர... மேலும் பார்க்க