Eva Longoria: `Dystopian நாடு; இனி அமெரிக்காவில் வசிக்கப்போவதில்லை!' - நடிகை ஈவா லாங்கோரியா
ஹாலிவுட் நடிகை ஈவா லாங்கோரியா, தனது குடும்பம் இனி அமெரிக்காவில் வசிக்கப் போவதில்லை என்றும், அமெரிக்காவை `டிஸ்டோப்பியன் நாடு' என்றும் குறிப்பிட்டுள்ளார். அவர் தன் குடும்பம், அமெரிக்காவின் தற்போதைய சமூக மற்றும் அரசியல் சூழலுக்கு எதிராக இருக்கிறது என்று கூறியுள்ளார்
அவர் "டிஸ்டோப்பியன் நாடு" என்ற சொல்லைப் பயன்படுத்தி, அமெரிக்காவின் தற்போதைய நிலையை மிக மோசமானதாகக் கூறியிருக்கிறார். அவர் இதை கூறும் பொழுது, அமெரிக்காவின் அசாதாரண அரசியல் மாற்றங்கள், உரிமை மீறல்கள், பொது பிரச்னைகள் போன்றவை மக்கள் மனதை கலக்கி விட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பிரெஞ்சு இதழான மேரி கிளாரிக்கு அதன் நவம்பர் மாத கவர் ஸ்டோரிக்கு அளித்த பேட்டியில், கோவிட்-19 தொற்றுநோய், வீடற்ற தன்மை மற்றும் கலிஃபோர்னியாவில் அதிக வரிவிதிப்பு மற்றும் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டது ஆகியவைதான் இந்த முடிவிற்குக் காரணம் என்று லாங்கோரியா கூறினார்.
``நான் இந்த நாட்டை விட்டு எளிதாக வெளியேற பாக்கியம் செய்துள்ளேன். ஆனால், பெரும்பாலான அமெரிக்கர்கள் அவ்வளவு அதிர்ஷ்டசாலிகள் அல்ல. அவர்கள் இந்த டிஸ்ட்டோபியன் நாட்டில் சிக்கிக் கொள்ளப் போகிறார்கள்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நேர்காணல் ஈவா லாங்கோரியாவின் சமூக பொறுப்பையும் அவரது கலாச்சார மாற்றத் துடிப்பையும் வெளிப்படுத்துகின்றன. சமுதாயத்தின் மேம்பாட்டுக்காக மாற்றங்களை ஏற்படுத்துவதாகவும், அரசியலில் சராசரி மக்களின் குரலும் ஓங்கி ஒலிக்க வேண்டும் என்றும் தான் விரும்புவதாக தெரிவித்திருந்தார்.
ஈவா லாங்கோரியா குடியேற்றக் கொள்கையில் மிகுந்த ஆர்வத்துடன் இருந்தவர். இந்த ஆண்டு கமலா ஹாரிஸ் சார்பாக பிரசாரத்தில் ஈடுபட்டார், 2024 ஜனாதிபதி பிரசாரத்தில் பராக் ஒபாமாவின் புகழ்பெற்ற "ஆம், எங்களால் முடியும்" என்ற கோஷத்துடன் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
தனது மேரி கிளாரி நேர்காணலில், கடந்த வாரம் ட்ரம்ப் பெற்ற வெற்றி தனக்கு மகிழ்ச்சியை அளிக்கவில்லை. அவரின் வெற்றி தன்னை வருத்தமடைய செய்தது என விவரித்தார்.
ட்ரம்பின் வெற்றி, ``அரசியலில் சிறந்த நபர் வெற்றி பெறுவார்" என்ற தனது நம்பிக்கையை நசுக்கியதாக அவர் கூறியிருந்தார்.
இந்த உரையின் பின்புலத்தில், ஈவா குடும்பம் மற்றும் சமூக அமைப்புகளை முன்னிறுத்தி, சமூகப் பொறுப்பு மற்றும் மாற்றத்தை ஊக்குவிக்கும் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.
அவர் தனது பயணம் மற்றும் அனுபவங்களை பகிர்ந்து கொண்ட போது, தனக்கு மாற்றத்தை ஏற்படுத்தி, சமூகத்தில் நல்லதொரு தாக்கத்தை உருவாக்க வேண்டும் என்ற ஆசையை தெரிவித்துள்ளார்.