செய்திகள் :

தீ விபத்தில் பலியான குழந்தைகளுக்கு ரூ. 5 லட்சம்!

post image

உத்தரப் பிரதேசத்தில் மருத்துவமனை தீ விபத்தில் பலியான மற்றும் காயமடைந்த பச்சிளம் குழந்தைகளுக்கு முதல்வர் யோகி நிவாரணத் தொகை அறிவித்தார்.

உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் உள்ள மகாராணி லட்சுமி பாய் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள பிறந்த குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவில், வெள்ளிக்கிழமை (நவ. 15) இரவு 10.45 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 10 பச்சிளம் குழந்தைகள் தீயில் கருகியும், கரும்புகை காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டும் உயிரிழந்தன.

இந்த சம்பவத்தையடுத்து, உயிரிழந்த குழந்தைகளுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத், துணை முதல்வர் பிரஜேஷ் பதக், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்தனர்.

மேலும், தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 5 லட்சமும், காயமடைந்த குழந்தைகளின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 50,000 நிவாரணத் தொகையை முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்தார். இந்த சம்பவம் தொடா்பாக விசாரணை நடத்தி 12 மணி நேரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய ஜான்சி வட்டாட்சியருக்கும், காவல் துறை டிஐஜி-க்கு முதல்வா் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

தீ விபத்தையடுத்து, தீவிர சிகிச்சைப் பிரிவு மூடப்பட்டது.

உயிரிழந்த குழந்தைகளில் 7 குழந்தைகளின் அடையாளம் காணப்பட்ட நிலையில், 3 குழந்தைகளின் டி.என்.ஏ.வை பரிசோதனை செய்து, அடையாளம் காணப்படவுள்ளது.

மேலும், இந்த தீ விபத்தில் 40 குழந்தைகள் காயமடைந்திருப்பதாகவும், அவர்கள் தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வருவதாகவும் கூறியுள்ளனர். அவர்களுக்கு நோய்த் தொற்று ஏற்படுவதற்கான அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளன.

இதனிடையே, தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மின்கசிவின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இருப்பினும், மருத்துவமனையில் பிற்பகலிலேயே மின்கசிவு பிரச்னை இருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், மருத்துவமனை நிர்வாகத்தினர், அதனைச் சரிசெய்யாமல் அலட்சியத்துடன் இருந்ததாக, சமாஜவாதி கட்சித் தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான டாக்டர் சந்திரபால் சிங் கூறினார்.

இதையும் படிக்க:மணிப்பூர்: 3 பெண்களின் உடல்கள் மீட்பு!

உ.பி.யில் சாலை விபத்து: புதுமணத் தம்பதி உள்பட 7 பேர் பலி!

உத்தரப் பிரதேசத்தின் பிஜ்னோர் நகரில் கார்-டெம்போ மீது மோதிய விபத்தில் ஜார்க்கண்டில் இருந்து திரும்பிய புதுமணத் தம்பதி உள்பட 7 பேர் பலியாகினர். டேராடூன்-நைனிடால் நெடுஞ்சாலையில் தம்பூர் தீயணைப்பு நிலையம... மேலும் பார்க்க

கடன் தொல்லையால் கணவர் தற்கொலை! மனைவி, குழந்தைகளுக்கு சிகிச்சை!

பிகாரில் கடன் தொல்லையால் ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை செய்த நிலையில், குடும்பத்தினர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.பிகாரின் பாங்கா மாவட்டத்தில் கன்ஹையா மஹாதோ என்பவர் ஆட்டோ ஓட்டுநராக இ... மேலும் பார்க்க

தெலங்கானாவில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து!

தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் மணிக்கொண்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இன்று(சனிக்கிழமை) காலை தீ விபத்து ஏற்பட்டது.தீ பற்றியதையடுத்து குடியிருப்பில் வசிப்பவர்கள் உடனடியாக அங்கிருந்து வ... மேலும் பார்க்க

மக்கள்தொகை கணக்கெடுப்புக்கே பாஜக ஏன் பயப்படுகிறது? - திக்விஜய் சிங்

சாதிவாரி கணக்கெடுப்பு கண்டிப்பாக நடத்தப்பட வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கூறியுள்ளார். தில்லியில் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு இன்று அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது: சாதிவாரி மக்க... மேலும் பார்க்க

மணிப்பூர்: 3 பெண்களின் உடல் மீட்பு!

மணிப்பூரில் அடையாளம் தெரியாத 3 பெண்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.மணிப்பூரில் மலைப் பகுதி மாவட்டமான ஜிரிபாமில், வெள்ளிக்கிழமையில் (நவ. 16) மூன்று பெண்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டது. அவர்கள் அடையாளம... மேலும் பார்க்க

மருத்துவமனையில் தீ விபத்து: 10 குழந்தைகள் பலி!

அரசு மருத்துவக் கல்லூரியில் செயல்பட்டு வந்த குழந்தைகள் சிகிச்சைப் பிரிவில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.உத்தரப் பிரதேசத்தின் ஜான்சி மாவட்டத்தில் உள்ள மஹாலக்ஷ்மி பாய் அரசு மருத்துவக்... மேலும் பார்க்க