மருத்துவமனையில் தீ விபத்து: 10 குழந்தைகள் பலி!
அரசு மருத்துவக் கல்லூரியில் செயல்பட்டு வந்த குழந்தைகள் சிகிச்சைப் பிரிவில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் ஜான்சி மாவட்டத்தில் உள்ள மஹாலக்ஷ்மி பாய் அரசு மருத்துவக் கல்லூரியில் செயல்பட்டு வந்த குழந்தைகள் சிகிச்சைப் பிரிவில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்து நிகழ்ந்த பகுதியில் 30 குழந்தைகள் சிகிச்சை பெற்று வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதில் தீ பரவியதில் படுகாயமடைந்த 10 குழந்தைகள் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் சில குழந்தைகள் கவலைக்கிடமான நிலையில் மீட்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.
தீயணைப்புப் படையினர் மருத்துவமனையில் பரவிய தீயை போராடி கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். எனினும், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.